மோசடி குற்றப் பத்திரம் கையளிக்கப்படவிருப்பது தெரிந்தும் ஊழல் அமைச்சரை பாதுகாக்கிறது அரசாங்கம்

மோசடி குற்றப் பத்திரம் கையளிக்கப்படவிருப்பது தெரிந்தும் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்த மோசடியின் பங்கு அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அத்துடன் வலசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சரவை பாதுகாக்க வாக்களிக்கும் அனைவரும் ஊழல் மோசடிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களாகும். அவர்களை நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் குறைந்த நிலக்கரி மோசடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரம் கையளிக்க இருக்கிறது. பிரபல அமைச்சு ஒன்றின் அமைச்சருக்கு எதிராக ஊழல் தொடர்பில் சாட்சி இருப்பதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்த பின்னர், அவ்வாறான குற்றச்சாட்டுக்குள்ளான வலுசக்தி போன்ற பொறுப்புவாய்ந்த அமைச்சின் அமைச்சராக தொடர்ந்தும் அவரை வைத்திருப்பது உலக ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு பொருந்துவதில்லை.

குறிப்பாக உலக ஜனநாயகம் தொடர்பில் கதைத்துவந்த அநுரகுமார திசாநாயக்க போன்ற ஜனாதிபதியின் கீழ் இவ்வாறு இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் எரிபொருட்களின் விலை அசாதாரண முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வாழ்க்கைச்செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்கள் நாட்டுக்குள் வருவதற்கு முன்னரே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த அமைச்சர் மேற்கொண்ட நிலக்கரி மோசடியின் பெறுபேறாகவே டீசலுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சாதாரண டீசல் இல்லாமையால் சுப்பர் டீசல் பயன்படுத்தியே மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயற்படுத்தப்படுகிறது. அமைச்சரின் நிலக்கரி மோசடியே இதற்கு காரணமாகும்.

மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். திருடர்களை கைது செய்வார்கள் என்றே நம்பினார்கள். ஆனால் இன்று திருடர்கள் அரசாங்கத்தை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிறைந்த இந்த அரசாங்கத்தின் மோசடி காரணமாக மக்கள் எரிபொருட்களுக்கு மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டிக்கிறது.

இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மின் கட்டணம் அதிகரிப்பது உறுதியாகும். அரசாங்கத்தின் மோசடியே இந்த நிலைமைக்கு காரணமாகும். அரசாங்கத்தில் இருக்கும் பொய்யர்களும் திருடர்களும் இணைந்து நாட்டின் எதிரகாலம் தொடர்பில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

நிலக்கரி மோசடியானது எமது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான மோசடியாகும். தரம் குறைந்த 9 கப்பல்களுக்கு ஏற்பட்ட நட்டம் 8.5 பில்லியன் ரூபாவாகும். 13ஆவது நிலக்கரி கப்பலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கப்பலுக்கும் நேரடியாக 2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.

ஆனால் இதனால் மறைமுகமாக இடம்பெறுகின்ற நட்டம், பொருளாதாரத்துக்கு ஏற்படுகின்ற நட்டம் இன்னும் கணக்கிடப்படவில்லை. இதுதான் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய மோசடியாகும்.மோசடி குற்றச்சாட்டு பத்திரம் கையளிக்கப்பட இருப்பதை தெரிந்தும் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் இந்த மோசடியின் பங்கு அனைவருக்கும் கிடைத்திருக்கிறது என்றே நினைக்க வேண்டி இருக்கிறது.

அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலசுக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். நம்பிக்கையில்லா பிரேரணையில் அமைச்சரை பாதுகாக்க வாக்களிக்கும் அனைவரும் ஊழல் மோசடிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களாகும். அவர்களை நாட்டு மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றார்.

photo-collage.png (1)

கனடாவில் ‘புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026’

June 13, 2026

கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான நடைப்பயணமொன்றை Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation ஆகியவை இணைந்து

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு