டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில், ஒரு இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய […]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள்; புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த […]

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (11) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் […]

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கமுயற்சிப்பதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (11) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு […]

இலங்கையில் அயோரா தினம்!

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கமான (IORA) தினம் மார்ச் 11 ஆம் தேதி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான IORA சிறப்பு மையத்தின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வும் நடைபெற்றது. Ministry of Foreign Affairs Sri Lanka மற்றும் Ocean University of Sri Lanka ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் யேமச்சந்திர […]

அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், […]

இலங்கையில் ஊடகவியலாளர் அவமதிப்பு – சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்

இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது. காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை சந்தித்து தகவல் சேகரித்துக் கொண்டிருந்த போது, தன்னை பொலிசார் என கூறிய சிலர் தனது பணிக்கு தடையாக நடந்துகொண்டு குறிப்புகளை பறித்துக் கொண்டதாக சிலோன் டுடே (Ceylon Today) ஊடகத்தின் ஊடகவியலாளர் சுலேச்சனா ராமையா குற்றம்சாட்டியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு இருந்த […]