இரட்டைக் கொலை; துப்பாக்கிதாரி தொடர்பில் வௌியான தகவல்!

அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று (21) கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி ஒரு முன்னாள் இராணுவச் சிப்பாய் எனவும், 2009 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் அவர் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 13 ஆம் திகதி அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண […]
அல்லைப்பிட்டியில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு […]
பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான வாகனத்தால் பிரதான நீர் விநியோகக் குழாய் உடைவு

மொனராகலை – பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அண்மித்த பகுதியில் பாலமொன்றிலிருந்து கெப் வாகனம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மொனராகலை நகரை அண்டிய பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த டபள் கெப் வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலத்திலிருந்து கீழே விழுந்து தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும் பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், […]
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 17 பொதுமக்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் கானி கெலோ மற்றும் கார்டா சாமியா ஆகிய மாவட்டங்களில் பாகிஸ்தான் விமானப்படை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாக ஆப்கானிய வட்டாரங்கள் குற்றம் சாட்டுகின்றன. இந்தத் தாக்குதலில் குறைந்தது சுமார் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானுக்குள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு […]
பிரித்தானியாவின் பௌத்த விகாரையின் 100-வது ஆண்டு நிறைவில் வழிபாடு!

பிரித்தானியாவின் லண்டன் பௌத்த விகாரை ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ, லண்டன் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தனது லண்டன் பயணத்தின் போது விகாரைக்குச் சென்ற அவர், அங்குள்ள மகா சங்கத்தினரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த 100-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்”

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டத்திற்க்கு எதிராக மக்கள் போராடிய போதும் , […]
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
நாட்டின் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, அநுராதபுரம் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (21) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 255 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். […]
வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான ‘ஆம்பர்’ நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (23) நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாயம் நிலவும் பகுதிகள்: மகாவலி கங்கையின் சில நீரேந்துப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மகாவலி கங்கையை அண்டிய […]
விழிப்புலனற்ற மாணவர்கள் இருவருக்கு கலைமாணிப் பட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்த வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, இவ்வாறு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புலம்பெயர் தமிழர்களுக்கு நாமல் அஞ்ச மாட்டார்!

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அழுத்தம் பிரயோகிக்கின்றன என்பதற்காக நாம் சும்மா இருந்துவிடப் போவதில்லை. இலண்டனுக்கு நிச்சயமாகச் செல்லுமாறு நாமல் ராஜபக்சவிடம் நான் கூறியுள்ளேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிகழ்த்தவிருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். இது குறித்து அவர் […]