நடிகை தாப்ஸிக்கு கங்கனாவுடன் என்ன பிரச்சினை?

நடிகை தாப்ஸி, கங்கனா ரணாவத் குறித்து பேசியுள்ளார். நடிகை தாப்ஸி நடிப்பில் வெளியான ஆசிஸ் (asis) திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தொடர்ந்து, தாப்ஸி கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால், அவரின் திரைப்படங்களுக்கென ரசிகர்களும் உள்ளனர். இதற்கிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தாப்ஸிக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே ஏதோ சண்டை இருப்பதால்தான் இருவரும் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது கூட ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என தகவல்கள் வெளியாகின. இந்த […]

அமரன் திரைப்படத்துக்கு பிலிம்ஃபேர் விருதுகள் 7

நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளது. நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்திய இப்படம் ரசிகர்களின் விருப்பமான படமாகவும் மாறியது. இந்த நிலையில், அமரன் திரைப்படத்திற்கு பிலிம்ஃபேர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த […]

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 பேர் கைது

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 பேரை தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் தமிழ்நாட்டின் திருப்பூரில் கைது செய்தனர். கடந்தாண்டு நவ. 10 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, […]

தமிழக அரசுக்கு இ.பி.எஸ் கண்டனம்

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைதான விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் தாண்டி, தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வைத்திருக்கிறது இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக அரசு. ஏற்கனவே […]

மகத்தான தலைவர் ஜெயலலிதா!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மான் கீ பாத்) என்ற தலைப்பில் மாதந்தோறும் கடைசி வாரம் ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களிடம் வானொலியில் வாயிலாக உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று (பிப். 22) 131-வது எபிசோடில் பங்கேற்று உரையாற்றினார். இந்த மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் மகத்தான தலைவர் […]

நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கெப் வாகனம் மற்றும் இரண்டு கார் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளதுடன் மூன்று வாகனங்களும் மாத்தறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மூவரும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறார்களின் உரிமைகள் மீறப்படுகின்றன; முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுகின்றன எனக் குற்றம் சாட்டி, மலையக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியம் ஹட்டன் ரயில் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை (22) அன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது. தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளை நேரடியாக நிர்வகிப்பதன் காரணமாக, தோட்டப்புற மாணவர்களுக்கு முறையான ஆரம்பக் கல்வி வழங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், முன்பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமை தோட்ட நிர்வாகங்களுக்கு யார் வழங்கினர் என கேள்வி எழுப்பிய அவர்கள், அரசின் கீழ் இயங்கும் […]

புத்தள வீரர்கள் கௌரவிப்பு

கொழும்பில் நடைபெற்ற ஆறாவது தெற்காசிய ஸெபக்தக்ரோ சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிகொண்ட இலங்கை தேசிய ஸெபக்தக்ரோ அணியில் விளையாடும் புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஆட்ட வீரர்களை வரவேற்கும் நிகழ்வு புத்தளம் பெரியபள்ளியில் அண்மையில் நடைபெற்றது. புத்தளம் ஸெபக்தக்ரோ அணி முகாமையாளர் ஷிப்லி மர்ஜானுடன் இலங்கை தேசிய ஸெபக்தக்ரோ அணியில் விளையாடிய புத்தளம் வீரர்கள் பெரியபள்ளி நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தார்களால் பாராட்டி வரவேற்கப்பட்டனர். புத்தளத்தில் ஸெபக்தக்ரோ விளையாட்டை வளர்ப்பதற்காக புத்தளம் பெரியபள்ளியால் […]

நம்பிக்கையுடன் இங்கிலாந்தை சந்திக்கிறது இலங்கை!

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஒத்திகைக்கு ஒப்பான முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ரி20 உலக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்கும் குறிக்கோளுடன் எட்டு அணிகள் மோதும் உண்மையான போராட்டமாக உருவெடுக்கவுள்ள சுப்பர் 8 சுற்று ஆரம்பமாகியுள்ளது. பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெறவிருந்த குழு 2க்கான சுப்பர் 8 போட்டி நாணய சுழற்சி க்கு பின்னர் தொடர்ச்சியாக […]

 உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு […]