பிரித்தானியாவின் லண்டன் பௌத்த விகாரை ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமால் ராஜபக்ஷ, லண்டன் பௌத்த விகாரைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தனது லண்டன் பயணத்தின் போது விகாரைக்குச் சென்ற அவர், அங்குள்ள மகா சங்கத்தினரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்த 100-வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு லண்டனில் பல்வேறு சமய மற்றும் கலாசார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.