‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ அரசின் மீது மரிக்கார் காட்டமான கருத்துகள் பகிர்வு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அவற்றை விற்பனை செய்து அந்த நிதியை கட்சியின் நிதியத்தில் வைப்பிலிட்டுள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ‘வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்’ தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]
இலங்கை கடற்படையில் இணைகிறது அமெரிக்க கடலோர காவல்படைக் கப்பல்

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான Cutter DECISIVE என்ற கப்பல், மேரிலாந்து மாநிலத்தின் பால்டிமோர் துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு இலங்கை கடற்படையில் இணைவதற்கான வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பயணம், ஒரு கப்பலை தாயகத்துக்கு கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை மேற்கொள்ளும் அதிக நீளமான கடல் பயணம் என்பதுடன், பனாமா கால்வாயை முதன்முறையாக கடக்கும் இலங்கை கடற்படை கப்பல் பயணம் என்ற வரலாற்றுச் சாதனையையும் பதிவு செய்கிறது. இலங்கை கடற்படையில் சேவையில் இணைந்த பின்னர், “DECISIVE” என்ற […]
கொலை வழக்கு: 20 ஆண்டுகளுக்குப் பின் இருவருக்கு மரண தண்டனை

கொலை குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவருக்கு பலப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியனகே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். விஜயமுனி தர்ஷன தினேஷ் டி சில்வா (37) மற்றும் லத்துவஹந்தி ரங்க பிரதீப் டி சில்வா (41) ஆகியோரே இவ்வாறு தண்டனை பெற்றவர்களாவர். இவர்கள் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 04ஆம் திகதி பலப்பிட்டிய, மதுவ பகுதியில் வைத்து பொரவகமகே மனோஜ் சம்பிக்க குமார என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவம் நடந்த போது […]
ஆசனப் பட்டி அணியாத 9,000 பேருக்கு அபராதம்!

அதிவேக வீதிகளில் பயணித்த வாகனங்களில் ஆசனப்பட்டி (Seat Belt) அணியாது பயணித்த 9,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அதிவேக வீதிகளின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களிலும் பொலிஸார் விசேட சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்தச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது சாரதிகள் மாத்திரமன்றி, வாகனத்திலுள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப் பட்டைகளை அணிவது கட்டாயமாகும் என பொலிஸார் […]
வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் வைத்தியசாலையில்

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர். காயமடைந்த நால்வரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பான […]
இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் […]