தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனையோ துஸ்பிரயோகங்களோ இருக்கவில்லை – இராதாகிருஷ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று அங்கு நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. மலையகத்திலும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த தண்டனைகளை இங்கும் வழங்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். […]
பௌத்த மகா சங்க மாநாடு; அரசியல் நோக்கமற்றது – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

பௌத்த மகா சங்க மாநாடு எந்தவொரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்த மாநாட்டை நடத்துவதற்கான பிரதான நோக்கம் நாட்டின் கலாச்சாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதேயாகும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அகில இலங்கை பௌத்த மகா சம்மேளன அலுவலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், குறிப்பாக மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. […]
தாழ்வுபாடு கடற்கரையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு மீனவர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்காக ‘டைனமைட்’ வெடி பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரின் சுற்றிவளைப்பின் போது, குறித்த இரு மீனவர்களும் மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் வைத்து இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைட் வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினர் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் […]
டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த ஆண்டு 15 நாடுகளை இலக்காகக் கொண்டு உலகளாவிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். “இலங்கையின் நற்பெயரை உலக மட்டத்தில் மிகவும் சிறந்ததொரு நிலைக்குக் கொண்டுவர நாம் […]
யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.
இரு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் சான்றுரை

கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புனர்க்கு, கலன் செயற்படுத்தத்தப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார். 1972ஆம் ஆண்டின் 10ஆம் இலக்க கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புனர்க்கு, கலன் செயற்படுத்ததப்படாப் பொதுக் காவுனர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்களுக்கு உரிமைமளித்தல் சட்டம் இதன்மூலம் திருத்தப்படுகின்றது. இதற்கு அமைய, இதுவரை விசேட துறையாகக் கருதப்படும் கொள்கலம் […]
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில்; இலங்கையை வீழ்த்தியது சிம்பாப்வே

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (19) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க […]
தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு ஆயுள் தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவச் சட்டத்தைப் பிரகடனப்படுத்த முயற்சித்ததைத் தொடர்ந்து, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டமையினாலேயே அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் 8 போலி வங்கிக் கணக்குகள்!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா அபயரத்னவினால் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆரம்பிக்கப்பட்ட 8 வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. குறித்த சட்டத்தரணி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சம்பந்தப்பட்ட வங்கிக் […]
நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் அதிகரிக்கிறது – சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் நாட்டில் பதிவான நீர்வெறுப்பு நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு, வீதியோரங்களில் உள்ள கட்டாக்காலி நாய்கள் கடித்ததால் அல்லாமல், வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் கடித்ததாலேயே இந்நோய் பரவியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர். நாய்கள், பூனைகள், அணில்கள், கீரிப்பிள்ளைகள் போன்ற விலங்குகள் கடிப்பதன் மூலம் பரவும் நீர்வெறுப்பு நோயானது ஒரு கொடிய நோயாகக் கருதப்படுகின்றது. சுகாதாரப் […]