தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனையோ துஸ்பிரயோகங்களோ இருக்கவில்லை – இராதாகிருஷ்ணன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று அங்கு நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. மலையகத்திலும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த தண்டனைகளை இங்கும் வழங்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்டமூலங்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதால் குடும்பமே இல்லாமல் போகின்றது. இவ்வாறான நிலைமையில் இதற்காக உரிய சட்டங்கள் அவசியமாகும். இதனால் இந்த சட்டமூலத்தின் நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன. இதில் அதிகமானவை போதைப் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குன்றவைப்பது போதைப்பொருள் விநியோகமும் போதைப் பொருள் பாவனையும் பிரதான பங்கு வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப் பொருள் பாவனையோ , துஷ்பிரயோகங்களோ இருந்ததே இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது.சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. மலையகத்திலும் இப்போது அவ்வாறான நிலைமையே உள்ளது.

எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது பாராட்டத்தக்க விடயமே. ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னரே தினமும் எங்கேயாவது கொலை நடக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான கொலை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளே இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாளக்குழுக்கள் தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது.இதனால் முழு நாடும் இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இதனால் தான் கொலைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள், துஸ்பிரயோகங்கள் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த சட்டங்களை இங்கு அமுல்படுத்த வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார்.

rocket sys

கனடாவுக்கு ஏவுகணை அமைப்புகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் – பென்டகன் தகவல்

May 1, 2026

கனடா மற்றும் பிற நட்பு நாடுகளுக்காக M142 ரக அதிநவீன ஏவுகணை அமைப்புகளை (HIMARS) தயாரிப்பதற்காக, லாக்ஹீட் மார்ட்டின்

anura mayday

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: சிஐடி அதிகாரி வெளிநாடு சென்றுள்ளார் – ஜனாதிபதி

May 1, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவர்

sama

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு

May 1, 2026

இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் சார்பில் 10

4EME22FUCUFXLKWCLCX26AJ45E

‘இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம்’: மழலையர் பள்ளி பாலியல் வன்கொடுமை விசாரணையில் மிசிசாகா நபர் மீது வழக்கு

May 1, 2026

நயாகரா பிராந்தியத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் (Daycare) நடந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு

N4GRQRXYBFAE3OJP7ZBTM4PGXA

GTA யூத வழிபாட்டுத் தலங்களில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை

May 1, 2026

GTA (Greater Toronto Area) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களை (Synagogues) இலக்கு வைத்து அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்

anura 2026

எரிபொருள் விலையில் சிறிய அதிகரிப்பு அவசியமாகலாம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 1, 2026

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரி விலையேற்றம் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருகின்றமை காரணமாக நாட்டின் எரிசக்தி துறையில்

1777567784-death-6

இணைய மோசடி தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சக அதிகாரி-மரணத்திற்கான காரணம் வெளியானது

May 1, 2026

ஒரு இணைய வழி கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதி

1200-675-24723167-thumbnail-16x9-velmurugan (1)

“கத்தி பட ரிலீஸின் போது விஜய் மேலாளர் பேரம் பேசினார்” – வேல்முருகன் கிளப்பிய அதிரடிப் புகார்!

May 1, 2026

சென்னை: எடிசன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர்

PYHMKVVG7YLHLX7FSBZNJG3LPI

கனடாவில் அகதிகள் மருத்துவச் செலவுகளின் ஒரு பகுதியை ஏற்க வேண்டும்!

May 1, 2026

டொராண்டோ — மத்திய அரசின் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, அகதிகள் இனி தங்களின் மருந்துச் சீட்டுகள், மனநல

1200-675-25564142-thumbnail-16x9-tvk-aadhav-arjuna

“தோல்வி பயத்தால் தவெக அலுவலகத்தை எரித்துள்ளனர்” – ஆதவ் அர்ஜுனா அதிரடி குற்றச்சாட்டு!

May 1, 2026

திருச்சி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் இன்று அதிகாலை மர்ம நபர்களால்

bef4d650-71a3-11f0-a82a-7bee61c7c107.jpg

“நாட்டின் கட்டமைப்புக்குத் தொழிலாளர்களே அஸ்திவாரம்” – ஓ.பன்னீர்செல்வம் மே தின வாழ்த்து!

May 1, 2026

சென்னை: சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொழிலாளர் பெருமக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

l35720250915134907

“வாக்கு எண்ணிக்கையில் திமுக தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு; பாமக முகவர்கள் விழிப்புடன் இருங்கள்” – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

May 1, 2026

சென்னை: மே 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின்