அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்: பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) தமது 66-வது பிறந்தநாளைக் அவர் கொண்டாடும் நிலையில், அவரது கைது இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நோர்போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என தேம்ஸ் வேலி பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அது […]

லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் முக்கிய அறிக்கை

சந்தையில் லாஃப்ஸ் வர்த்தக நாமத்தைக் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குத் தற்காலிகத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் ஊடகச் செய்திகள் தொடர்பில் அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 30,000 மெட்ரிக் தொன் எல்.பி. எரிவாயு இறக்குமதி-ஏற்றுமதி களஞ்சிய முனையத்தை உள்ளூர் விநியோகத்திற்காகப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள ஒழுங்குமுறை சார்ந்த கட்டுப்பாடுகளே தற்போதைய சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கான பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் களஞ்சிய முனையத்தை உள்ளூர் நடவடிக்கைகளுக்காக விரைவாக […]

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் எனவும், தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமுல்படுத்தக் கூடாது எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (19) பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபை உறுப்பினர்களான சிவபாதம் குகனேசன் மற்றும் குமாரவேலு அகிலன் ஆகியோரால் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் தற்போது அரசினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத […]

AI-க்கு இலங்கை தயார்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறும் ‘AI IMPACT SUMMIT 2026’ மாநாட்டுக்கு இணையாக நடைபெறும் அரச தலைவர்கள் அமர்வில் கலந்துகொண்டுள்ளார். இங்கு அரச தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும் கூட்டாக இணைந்து முன்செல்லவும் இலங்கை தயாராக உள்ளது’ எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக குழுவுடன் பிரித்தானிய துணைப் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி (David Lammy) கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக குழுவினரை சந்தித்தார். இந்த சந்திப்பு, பிரித்தானியா – இலங்கை கூட்டுறவை தினந்தோறும் வலுப்படுத்துவதில் அயராது உழைக்கும் உயர்ஸ்தானிகரக பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் பாராட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகள், மனிதாபிமான உதவித் திட்டங்கள், வர்த்தக உறவுகள், தூதரக நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உயர்ஸ்தானிகரக குழுவினர் மேற்கொண்டு […]

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா!

இலங்கை மின்சார சபையின் வழிகாட்டலில் ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 150 மெகாவாட் கொள்ளளவு கொண்ட நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவைப் பார்வையிடுவதற்கான விசேட ஊடக விஜயம் செவ்வாயக்கிழமை (17) நடைபெற்றது. இவ் கள விஜயத்தில் ஊடகவியலாளர் உள்ளடக்கிய குழு புதன்கிழமை (16) ஹம்பாந்தோட்டை கொன்னொருவ பிரதேசத்திற்கு இந்த கள விஜயத்தை மேற்கொண்டது. இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா […]

மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!

மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நேற்று புதன்கிழமை (18) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் […]

17 ஓட்டங்களால் இந்தியா வெற்றி!

2026 டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில், இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சிவம் துபே 31 […]

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக்கொலை; 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் நேற்று (18) மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது பாதிக்கப்பட்ட தரப்புக்காக சுமார் 50 சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்த நிலையில், இன்றைய தினத்திலும் சந்தேகநபர்களுக்காக எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகாமை ஒரு விசேட அம்சமாகும். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்திடம் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என நீதவான் சந்தேகநபர்களிடம் வினவினார். அச்சந்தர்ப்பத்தில் தமக்கு வாக்குமூலம் […]

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு பிணை வழங்கியது சிக்கலா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார் என்ற முடிவுக்கு வருவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாத போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நேற்று(18) தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமெனக் கூறி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 16.6 மில்லியன் ரூபா அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் முதலாவது […]