யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.