பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை. சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி படுகொலையுடன் தொடர்புடையவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்குரிய விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 / […]

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அமைதி திட்ட அமைப்பில் இணைந்து கொள்ளப் போவதில்லை – வத்திக்கான் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை என வத்திக்கான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே கையாள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அதன் மறுசீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த ‘அமைதி திட்ட அமைப்பை’ உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி […]

ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர். அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை […]

ஸ்பெயினில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; 05 இளைஞர்கள் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளதோடு, 04 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் எனவும், அவர்களில் சிலர் வயது குறைந்தவர்களாக இருக்கலாம் எனவும் ஸ்பானிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பார்சிலோனா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஓசோனா மாவட்டத்தில், சுமார் 21,000 பேர் வசிக்கும் மான்லூ பகுதியில் உள்ள ஐந்து மாடி […]

கிராஸ்க்ளோக்னரில் மலையேற்றத்தின் போது காதலி மரணம்; காதலனுக்கு எதிராக வழக்கு

ஆஸ்திரியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரமான கிராஸ்க்ளோக்னரில் (3,798 மீ), கடந்த ஆண்டு குளிர்காலத்தில் தனது காதலியை கடும் குளிரில் தவிக்கவிட்டு உயிரிழக்கச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலையேற்ற வீரர் மீதான விசாரணை வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 19-ஆம் திகதி அதிகாலையில், 33 வயதுடைய பெண், கடும் பனிப்புயலில் சிக்கி உடல் உறைந்து உயிரிழந்தார். அவருடன் சென்ற 36 வயதுடைய காதலன், காதலி மிகவும் சோர்வடைந்த நிலையில் அவரை மலை உச்சியில் தனியே விட்டுவிட்டு […]

மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று செவ்வாய்க்கிழமை (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயமானது, சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கையின் அங்கத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த சந்திப்பின்போது, அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போதைய நீடிக்கப்பட்ட […]

விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து வடமாகாணத்தில் முறைப்பாடு செய்யலாம்

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் […]

யாழ்.பல்கலையில் தொடரும் பகிடிவதை; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடி விசாரணை

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுகின்றன என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், பல்கலைக்கழக நிர்வாகம் பதில் எதையும் வழங்காத நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் […]

எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது?

சமத்துவம் என்பது கேள்விக்குறியாகவுள்ள வன்னிப்பெருநிலப்பரப்பில் இந்த அரசாங்கம் அபிவிருத்தி சார்ந்த ஆற்றுப்படுத்தல்கள் சிலவற்றை வழங்குவதை மறுப்பதற்கில்லை. அதற்காக மாறி வரும் ஒவ்வோர் அரசாங்கமும் ஆற்றுப்படுத்தல்களை மட்டும் வழங்கிக்கொண்டிருந்தால் எங்களுக்கான சமத்துவ நிலையை நாங்கள் எப்போது அடைவது? துறைதோறும் புரையோடிப்போயுள்ள சீரற்ற வளப்பரம்பலால் தொடர்ந்தும் வன்னி மண் வஞ்சிக்கப்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் […]

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்த உலகளாவிய சாசனத்தில் இணைகிறது இலங்கை

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது. சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை செவ்வாய்க்கிழமை (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது. இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி […]