விதிமீறும் பேருந்து சாரதிகள் குறித்து வடமாகாணத்தில் முறைப்பாடு செய்யலாம்

வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியாச் சாலையைச் சேர்ந்த சாரதி ஒருவர், பேருந்தைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியமை தொடர்பில் எமக்கு ஆதாரத்துடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இச்செயற்பாடு தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய ‘மீட்டல் பயிற்சி’ வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எனக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

தனியார் பேருந்தாகவோ அல்லது அரச பேருந்தாகவோ இருப்பினும், பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறிச் செயற்படும் சாரதிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சாரதிகள் வாகனம் செலுத்தும்போது கைப்பேசி பேசுதல், அதிவேகமாகச் செலுத்துதல் அல்லது கவனயீனமாகச் செயற்படுதல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், அதனை ஒளிப்படம் அல்லது காணொலியாக எடுத்து 0719090900 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் ஊடாக ஆதாரங்களுடன் அனுப்பி வைக்க முடியும்.

அவ்வாறு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மீது எவ்வித பாரபட்சமுமின்றித் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jail

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: NPP பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

October 23, 2026

இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை

har

தாய்வானில் சாம்பி சூறாவளி நெருங்குவதால் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து!

October 23, 2026

சக்திவாய்ந்த சாம்பி சூறாவளி தாய்வானை நெருங்கி வருவதால், இன்று வெள்ளிக்கிழமை (23) கிட்டத்தட்ட முழுத் தாய்வானும் ஸ்தம்பித்துள்ளதுடன், பொதுமக்கள் வீட்டிலேயே

Chama

சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்!

October 23, 2026

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும்

Eng

இலங்கை இங்கிலாந்தை வென்றது!

October 23, 2026

பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல்பின்டியில் தற்போது முடிவுக்கு வந்த இங்கிலாந்துடனான போட்டியில் 429 ஓட்டங்களை

mah

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஹிந்த நாமலுக்குக் கடிதம்

October 23, 2026

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல்

ravikaran11

சைவ மக்களின் சமய மரியாதைக்கு நாட்டில் ஏற்பட்ட அவமதிப்புக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

October 23, 2026

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது

deng

டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்

October 23, 2026

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு

mullai

முல்லைத்தீவில் சுமார் 7 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

October 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக

chemmani11111111111111

செம்மணிப் புதைகுழி; நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது!

October 23, 2026

செம்மணிப் புதைகுழியில் இருந்து சில நாணயங்கள் மீட்கப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்கு உரியவையாகவும் இருந்தன. அத்துடன் புதைகுழியொன்றில்

sau

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

October 23, 2026

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று மாலை

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற