பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

தேசிய பாதுகாப்பு தொடர்பில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவுமில்லை. சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி படுகொலையுடன் தொடர்புடையவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்குரிய விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27 / 2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலைக்குரியது. நாட்டின் சகல பிரஜைகளின் உயிர்களையும் நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். சாதாரண பிரஜைகளுக்கு தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் கிடையாது.

அக்குரேகொட பகுதி அதி பாதுகாப்பு வலயம் இல்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்..சட்டத்தரணிகள் தமது சேவை பெறுநர்களுக்காக முன்னிலையாகும் உரிமை உண்டு. அது அவர்களின் தொழில் கடமையாகும்.அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பாதாளக் குழுக்களின் பெயர் குறிப்பிட்டு பொலிஸார் எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை.

உயிரிழந்த சட்டத்தரணியிடம் பொலிஸார் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு 12 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரணையின் அனைத்து விடயங்களையும் தற்போது குறிப்பிட முடியாது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள். அதனைத் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு விடயங்கள் அறிக்கையிடப்படும். பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய வழக்குகளுக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு ஊடாக தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ala

கடல் அலைகள் நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம்!

August 26, 2026

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு இன்று (26) பிற்பகல் வௌியிடப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு

bima

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் அச்சமின்றி நாடு திரும்பலாம்

August 26, 2026

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும்

hars

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி உண்மையை கண்டறியும் செயற்பாடுகளை ஒருபோதும் அரசாங்கம் நிறுத்தாது – அமைச்சர் ஹர்ஷன

August 26, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை வடக்குக்கு மட்டுமல்ல, தெற்கில் இருப்பவர்களுக்கும் பிரச்சினையாகக் காணப்படுகிறது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

ford12

அமெரிக்காவிற்கான மின்சார விநியோகத்தை நிறுத்துவதில் ஒன்டாரியோ தன்னிச்சையாகச் செயல்படாது: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போருக்கு ஒன்டாரியோ அளிக்கும் பதிலடியில் “எல்லா வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளன” (everything’s on

hur

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட கண்ணிவெடிகள்!

August 26, 2026

ஹோர்முஸ் நீரிணையின் சர்வதேசக் கடல் பகுதிக்குள் இருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டன என்று அமெரிக்கக் கடற்படை தன்னிடம் தெரிவித்துள்ளதாக

socfd

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

August 26, 2026

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல்

doug-ford-ontario-premiere-february-7-2023

டிரம்ப் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள் ‘உலகம் முழுவதும் எதிரொலித்தன’: ஃபோர்ட்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இந்த வார தொடக்கத்தில் தான் நடத்திய தனிப்பட்ட விமர்சனங்களில் எல்லை மீறிச் சென்றுவிட்டதாகத்

canada export

எங்கள் கைகளில் பல வாய்ப்புகள் உள்ளன’: ஜோலி

August 26, 2026

அமெரிக்காவைக் கையாள்வதற்கு கனடாவிடம் இன்னும் பல வழிமுறைகள்/வாய்ப்புகள் இருப்பதாகத் தொழில் துறை அமைச்சர் மெலனி ஜோலி (Melanie Joly) தெரிவித்துள்ளார்.

trump

கனடாவுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் இது’: டிரம்ப்

August 26, 2026

அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்த சில நாட்களிலேயே, “கனடா இனிமேலும் இப்படிச் செய்ய முடியாது என்பதை அவர்களுக்குப்

DNC4U5DD3VAOPMURZP5EIMAUFM

நேபாளம் மற்றும் சீனாவில் திடீர் வெள்ளப்பெருக்கு: குறைந்தது 98 பேர் பலி; 24 கனடியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை

August 26, 2026

உடின் துங்கா, நேபாளம் — நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் குறைந்தது

vaiko-0-15505761891-1774239191

“அரசாங்கத்தை முடக்கிப் போடச் சில ஊழல் அதிகாரிகள் நினைக்கிறார்கள்!” – வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

August 26, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, அரசு நிர்வாகத்தில்

Shahjahan

“சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரம் அளித்த த.வெ.க. அரசு!” – மிலாதுன் நபி விழாவில் அமைச்சர் ஷாஜகான் நெகிழ்ச்சி உரை

August 26, 2026

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற மிலாதுன் நபி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சியின் பாபநாசம்