நாமல் – ஷிரந்திக்கு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரிலிய சவிய திட்டம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. குறித்த விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வருமாறு முன்னர் அவருக்கு […]
தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமையுடன் தீர்வு!

சிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் விசேட கூட்டமொன்றை அந்தக் கட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடத்துகின்றது. கட்சித் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்குக் கௌரவமானதொரு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தவுள்ளார். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் ஏலத்திற்கு வரும் கிராமம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள ‘லிகோலா’ (Licola) என்ற மிகச்சிறிய கிராமம் சுமார் 10 மில்லியன் டொலர் வரை ஏலத்திற்கு வந்துள்ளது. லயன்ஸ் கிளப் அமைப்புக்குச் சொந்தமான இந்தக் கிராமம், பராமரிப்புச் செலவு மற்றும் நஷ்டம் காரணமாக விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மிகச்சில மக்களில் ஒருவரான லியான் ஓ’டோனல், அங்கு ஒரு பொது அங்காடியை நடத்தி வருகிறார். தற்போது கிராமம் விற்பனைக்கு வந்துள்ளதால், அவர் தனது கடையையும் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் […]
நாட்டுக்கு தரமான மனித வளத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு
எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், தெளிவான இலக்கும் நோக்கமும் இருப்பதால் அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். 2023/2024 கல்வியாண்டிற்காக […]
கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி?

ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா தெரிவித்ததன்படி, 2025 நவம்பர் மாதம் கனடாவின் பொருளாதாரம் நிலைத்துவிட்டது. அக்டோபர் மாதத்தில் 0.3% வீழ்ச்சிக்கு பிறகு, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0% என்று மதிப்பீடு செய்யப்பட்டது. சேவை துறைகளில் சிறு வளர்ச்சி பதிவாகியிருந்தாலும், உற்பத்தித் துறைகளில் (உற்பத்தியின் உற்பத்தி உட்பட) வீழ்ச்சி ஏற்பட்டது. ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கனடா கூறுவதாவது, மொத்த உற்பத்தித் துறை 1.3% வீழ்ச்சி அடைந்தது, குறிப்பாக நிலைத்திருக்கும் பொருட்களின் உற்பத்தியில் 1.9% வீழ்ச்சி ஏற்பட்டது. இதில் போக்குவரத்து உபகரணங்கள், இயந்திரங்கள், உற்பத்தி […]
கியூபெக் நகர மசூதி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

2017 ஆம் ஆண்டு கியூபெக் நகர மசூதி தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரவும், இந்த இழப்பின் சுமையை தொடர்ந்து தாங்கி வரும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு மரியாதை செலுத்தவும் பிராம்டன் நகரம் ஒரு நிமிட மௌனத்தை அனுசரித்தது. இஸ்லாமோபோபியா மற்றும் அனைத்து வகையான வெறுப்பு செயல்களால் பாதிக்கப்பட்ட குடிமக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். அனைவருக்கும் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சேர்ந்திருக்கும் உணர்வு அடிப்படையாக உள்ள பிராம்டனை உருவாக்கும் எங்கள் பகிர்ந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம் என பிராம்டன் […]
சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு!

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் […]
கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும் முக்கிய சுரங்கமாக கருதப்படும் ருபாயா (Rubaya) சுரங்கத்திலேயே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது. உலகிற்குத் தேவையான கோல்டன் கனிமத்தில் சுமார் 15% இந்த ருபாயா சுரங்கத்திலிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தச் சுரங்கம் 2024 […]
வீதியில் இருந்து போதைப்பொருள் பாவனைவிப்பவர்களால் மாணவியருக்கு தொந்தரவு!
வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியும் அங்கு பணி புரியும் பொலிஸார் அசண்டையீனமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று (30) ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதி ஒருவரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மேலும் தெரிவிக்கையில், சிலர் […]
வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன் – விஜய்

என்.டி.டிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.அரசியல்தான் எனது எதிர்காலம். எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம். வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன். […]