தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைய மக்கள் வாக்கு செலுத்துவார்கள் மு . க. ஸ்டாலின்!
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைய மக்கள் வாக்கு செலுத்துவார்கள என்று மக்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது என்று முதல்வர் மு . க. ஸ்டாலின் சூளுரைத்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்து அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் பல திட்டங்களைச் சொன்னார்களே செய்தார்களா? எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால், திமுக சொன்னதைத்தான் செய்யும்; செய்வதைத்தான் சொல்லுமென மக்களுக்குத் தெரியும். இதுதான் […]
பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க கோரிக்கை

பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்த எத்தனையே பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர் அவர்கள் கூறுகின்றனர். இந்த வேலைவாய்ப்பை தங்களுக்கு கிடைத்தால் எந்த […]
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த போராட்டமானது இன்று(31) சனிக்கிழமையும், நாளை(1) ஞாயிற்றுக்கிழமையும் திஸ்ஸ விகாரைக்கு அருகாக போராட்டம் இடம்பெறவுள்ளது. இன்று மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும், பௌர்ணமி நாளான நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையும் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகள், […]
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் பதற்றமான பாதுகாப்புச் சூழல் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுக்கு அறிவித்துள்ளது. ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயகரமான சூழ்நிலையையும் கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சினால் தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். அவசர காலங்களில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் ஒவ்வொரு […]
பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிங்கி இறால்களுடன் ஒருவர் கைது

பிடிப்பதற்கு தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்களைப் பிடித்து, வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடமொன்று பேருவலை, மருதான பிரதேசத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் களுத்துறை அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்போது, பிடிக்கத் தடைசெய்யப்பட்ட சிறிய அளவிலான சிங்கி இறால்கள் மற்றும் முட்டையிடக்கூடிய சிங்கி இறால்கள் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறிய அளவிலான மற்றும் முட்டையிடக்கூடிய […]
நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபை (UN) நிதி வீழ்ச்சியைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். பல உறுப்பு நாடுகள் தமது கட்டாயப் பங்களிப்புத் தொகையைச் செலுத்தத் தவறியமையே இந்நிலைமைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதுடன், இது ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களைச் செயற்படுத்துவதில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய நிலை தொடருமானால், எதிர்வரும் ஜூலை மாதமளவில் அமைப்புக்கு நிதித் தட்டுப்பாடு […]
சட்டவிரோதமாக ஆமை முட்டைகளை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இந்த 117 முட்டைகளையும் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் ஆமை […]
தரம் 6 கல்வித் தொகுதி சர்ச்சை; சி.ஐ.டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய கல்வித் தொகுதி (Module) தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, அது தொடர்பான விசாரணைகளை விரைவில் முடிக்குமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க நேற்று (30) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இது […]
ரயில் சேவைகளில் தாமதம்?

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய இரண்டு தினங்களில் ரயில் சேவைகள் தாமதமாகக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணிகள் காரணமாக, இன்று மற்றும் […]
மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று (31) இடம்பெற்றது. இன்று காலை கே.கே.எஸ் வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக குறித்த திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், […]