தங்க மற்றும் வெள்ளி விலைகளில் சடுதியான வீழ்ச்சி

உலகத் தங்க மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (31) நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதுடன், இது நேற்றுடன் (30) ஒப்பிடுகையில் 434.45 அமெரிக்க டொலர் வீழ்ச்சியாகும். சதவீத அடிப்படையில் இந்த வீழ்ச்சி 8.15% ஆகும். வெள்ளி விலைகளும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. இன்று ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 85.34 அமெரிக்க டொலர்களாக உள்ளதுடன், இது முந்தைய தினத்துடன் ஒப்பிடுகையில் 29.16 அமெரிக்க […]
நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபம்

பாதிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபம் அனர்த்த பாதிப்பு காரணமாக முடங்கியுள்ள வர்த்தகங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய சுற்றுநிருபமொன்றைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 2026.01.22 அன்று வெளியிடப்பட்ட வரவு செலவுத் திட்ட சுற்றுநிருப இலக்கம் 08/2025(iii) இன் கீழ் முன்மொழியப்பட்ட, ‘அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் திட்டத்தில்’ குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தகச் சேதங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ள முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025 நவம்பர் […]
ஒட்டாவா பசுமைக் கண்ணாடி வீடுகளுக்கு வரிவிலக்கு!

அல்பெர்டாவின் பசுமைக் கண்ணாடி வீடு (greenhouse) தொழில் துறையின் பிரதிநிதிகள், புதிய கூட்டாட்சி வரித் திட்டம் தொழில் விரிவாக்கத்தை எளிதாக்கலாம் என்றாலும், அது உணவுப் பொருட்களின் விலையை குறைக்க உதவும் என்பதில் சந்தேகமே என அல்பெர்டா பசுமைக் கண்ணாடி வீடு வளர்ப்போர் சங்கம் தெரிவிக்கின்றது. ஒட்டாவா திங்களன்று அறிவித்ததாவது, புதிய வசதிகளை வாங்கும் அல்லது கட்டும் உற்பத்தியாளர்கள், மூலதன விரிவாக்கச் செலவுகளை வரிகளில் வேகமாக கழித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். தற்போதைய விதிகளின்படி, ஆண்டுக்கு 10 சதவீதம் மட்டுமே […]
பிரம்டன் மாநகரில் பிளாக் ஹிஸ்டரி மாதக் கொண்டாட்டங்கள்

கனடா பிரம்டன் மாநகரில் ‘பிளாக் ஹிஸ்டரி மந்த்'(Black History Month) ஒரு மாதம் முழுவதும் கொண்டாட்டம், கற்றல் மற்றும் சமூக இணைப்புடன் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. பிப்ரவரி 7 அன்று The Rose அரங்கில் நடைபெறும் பிரம்டன் நகரின் சிறப்பு பிளாக் ஹிஸ்டரி மந்த் நிகழ்வுடன் இந்த மாதத்தைத் தொடங்குங்கள் என பிரம்டன் நகராட்சி தெரிவித்துள்ளது. “30 ஆண்டுகளாக பிளாக் ஹிஸ்டரி மந்த்: தலைமுறைகள் கடந்த கருப்பு சமூகத்தின் சிறப்பை கௌரவித்தலே மேற்படி நிகழ்வின் சிறப்பம்சமாகும். இந்த மாலை […]
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தொழிலாளர்கள்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தத்தில் பெருந்தோட்ட அமைச்சு பிராந்திய தோட்ட நிறுவனங்களுடன் கையெழுத்திட்டுள்ளது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஜனாதிபதிக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர் தொழிலாளர்கள். 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 1,750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது இது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாபெரும் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு
எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்த […]
அனைத்து துறைகளின் ஊடாகவும் மட்டக்களப்பில் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 48 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2,534 மில்லியனுக்குரிய அந்த வேலை திட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது கடந்த காலத்தில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், கடந்த காலத்தில் இருந்த […]
இலங்கை சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களுக்கு பிரவேசிக்கும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அனுமதிப் பத்திரம் அறிமுகப்படுத்தும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் சுற்றுலா விசாக்களை விரைவாகச் செயற்படுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக […]
அமெரிக்காவிலன் நட்சத்திர வீராங்கனை லிண்ட்சே வொன் விபத்தில் காயம்!

மிலன் கார்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை லிண்ட்சே வொன் (Lindsey Vonn), சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் பனிச்சறுக்கு போட்டியின் போது விபத்தில் சிக்கி காயமடைந்தமை அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 வயதான லிண்ட்சே வொன், கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana) பகுதியில் நடந்த ‘டவுன்ஹில்’ பந்தயத்தில் பங்கேற்றார். அதன்போது பனிப்பொழிவு மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஒரு எகிறி குதித்தலின் (Jump) போது நிலைதடுமாறி பாதுகாப்பு வலைக்குள் […]
‘ரோப்லாக்ஸ்’ மீது நெதர்லாந்தில் விசாரணை ஆரம்பம்

நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு, ‘ரோப்லாக்ஸ்’ (Roblox) மீது அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பித்தது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான காட்சிகள் இடம்பெறுவதாக நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு (ACM) ஒன்லைன் கேமிங் தளமான ‘ரோப்லாக்ஸ்’ (Roblox) மீது அதிகாரபூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான காட்சிகள் இந்தத் தளத்தில் இடம்பெறுவதாகவும், அவர்களைப் பாதுகாக்க இந்த நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எழுந்த முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை […]