சிரியாவில் அரசாங்கத்திற்கும் ஜனநாயகப் படைகளுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

சிரியாவின் புதிய ஜனாதிபதி அஹ்மது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்திற்கும், குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வடகிழக்கு சிரியாவில் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வந்த குர்திஷ் படைகள் மற்றும் நிர்வாக அமைப்புகள் அனைத்தும் படிப்படியாக சிரிய அரசுடன் இணைக்கப்படும். இதன்மூலம் சிரியா மீண்டும் ஒரு ஒருங்கிணைந்த நாடாக உருவெடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக குர்திஷ் […]

காணி உத்தியோகத்தர் மீதான தாக்குதலுக்கு பச்சிலைப்பள்ளியில் எதிராக போராட்டம்

கடமை முடித்து வீடு சென்ற கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டன கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்துள்ளனர். கடந்த 28ஆம் திகதி அன்று குறித்த உத்தியோகத்தர், அலுவலகத்தில் கடமை முடித்து தனது வீடான பருத்தித்துறைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதன்போது, எழுதுமட்டுவாளுக்கு அண்மித்த பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த உத்தியோகத்தரை பேருந்தில் போத்தல் கொண்டு தாக்கியிருந்தனர். தாக்கப்பட்ட உத்தியோகத்தர், […]

மியான்மர் தேர்தல்: இராணுவ ஆதரவு கட்சி வெற்றி

மியான்மரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், இராணுவ ஆதரவு பெற்ற யூனியன் மற்றும் ஒற்றுமை கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மியான்மரில் தற்போது இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இராணுவ ஆட்சியின் தலைவராக மின் ஆங் ஹ்லைங் உள்ளார். 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இராணுவ ஆட்சியால் அவை ரத்து செய்யப்பட்டன.

காத்தான்குடியில் யுவதி வன்புணர்வு: சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

காத்தான்குடியில் யுவதி ஒருவரை பலாத்காரமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஒருவரை 3ம் திகதி வரை விளக்கமறியல் (கனகராசா சரவணன் ) காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு 3 மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் […]

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு!

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு நேற்று வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட நிகழ்வானது வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி மாவடி சந்தி, மூளாய் சந்தி, சுழிபுரம் சந்தி, சித்தங்கேணி சந்தி ஊடாக மீண்டும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது. அதேபோல பெண்களுக்கான வீதியோட்ட நிகழ்வானது சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி சித்தங்கேணி சந்தி ஊடாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியை வந்தடைந்தது. அந்தவகையில் ஆண்கள் அணியில் […]

சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு

கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 2,032,804 வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிக்கப்பட்டன. இலங்கை சுங்கப்பிரிவின் ஏற்பாட்டில், கெரவலப்பிட்டிய கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் இவை அழிக்கப்பட்டன. இந்த வெளிநாட்டு சிகரெட்டுகளின் சந்தை பெறுமதி 305 மில்லியன் ரூபா ஆகும். இந்தத் தொகுதி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தால் அரசாங்கத்திற்கு 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழப்பு ஏற்பட்டிருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

டி-20; முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகலயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. எனவே போட்டி 17 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 133 […]

இன்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட கூட்டம்

தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 48 மணிநேரக் கால அவகாசம் முடிவடைந்த போதிலும், அரசாங்கம் இதுவரை சாதகமான எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மீண்டும் மழைக்கு வாய்ப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது […]

ஜனாதிபதியினால் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பரிந்துரை

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மற்றுமொரு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (31) அரசியலமைப்பு சபை கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியினால் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக 4 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு சபை உரிய முறையில் நிறைவேற்று அதிகாரத்தைச் செயற்படுத்தாத காரணத்தினால் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் பதவி […]