மீள் கட்டுமானத்தில் மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல்?

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு இருக்கிறது. ஆகவே எங்கள் இந்த குற்றசாட்டை ஐ.நா சபை விசேட கவனத்தில் எடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின், இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான (Rebuilding Sri Lanka), திட்டங்களின் கீழ், […]

மீண்டும் 10 பெய்லி பாலங்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு!

“டித்வா” புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இன்று (31) இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பாலங்கள் இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ள 450 மில்லியன் டொலர் பொருளாதாரப் பொதியின் ஒரு அங்கமாகும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பாலங்கள் இலங்கைக்கு வந்தடைந்ததும், பாதிக்கப்பட்ட […]

ஊடகவியலாளர்கள் கொலை: தீவிரப்படுத்தப்படும் விசாரணைகள்

வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விசாரணைகளின் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஆதாரங்களும் கிடைத்துள்ளன. […]

36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கனமழை!

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் […]

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த சஜித்

தங்களைக் கல்விச் சேவையில் உடனடியாக உள்வாங்குமாறு கோரி இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை வருகை தந்தார். இந்தப் போராட்டக்காரர்கள் கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறாயினும், தமது போராட்டத்தைச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியதைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டிருந்த சிலரின் உடல்நிலை […]

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 8 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஐந்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடமாற்றம் பெற்றுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள்: பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம்: காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா […]

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தத் தீர்மானம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய வகையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை முன்வைக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர கால அவகாசம் வழங்கியிருந்தது. இருப்பினும், […]

டி20 உலகக்கிண்ண அணியிலிருந்து ஸ்மித், பெட் கம்மின்ஸ் நீக்கம்?

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து சிரேஷ்ட வீரர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பெட் கம்மின்ஸின் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலிய தெரிவுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அவருக்குப் பதிலாக பென் துவார்ஷுயிஸ் (Ben Dwarshuis) 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரில் அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்திற்கு அணியில் இடம் […]

திருகோணமலையில் கனமழை

மிக நீண்ட நாட்களின் பின்பு திருகோணமலையில் அடை மழை பெய்து வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் கனமழை காரணமாக தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. திருகோணமலையின் கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நெற் செய்கை அறுவடை இயந்திரம் மூலமாக இடம் பெற்று வரும் நிலையில் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.