மிக நீண்ட நாட்களின் பின்பு திருகோணமலையில் அடை மழை பெய்து வருகின்றது.
தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் கனமழை காரணமாக தடைப்பட்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது.
திருகோணமலையின் கிண்ணியா,தம்பலகாமம்,கந்தளாய் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை பெய்து வருகின்றது.
இதனால் அன்றாட ஜீவனோபாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் நெற் செய்கை அறுவடை இயந்திரம் மூலமாக இடம் பெற்று வரும் நிலையில் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.