சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு!

கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவை இணைந்து, பிள்ளைகள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி, இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் தமது பிள்ளைகள் மீது ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதும் இன்று இலங்கையில் பல பெற்றோர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாகும்.

இதற்கான தீர்வாக, பிள்ளைகள் தொழில்நுட்பத்தை அணுகுவதை மறுப்பதாக இருக்கக்கூடாது. சமூக ஊடகங்கள் மூலம் கல்வி, படைப்பாற்றலை வளர்த்தல் மற்றும் தொடர்பாடல் போன்ற பல சிறந்த விடயங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் அதே நேரத்தில், நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு யதார்த்தமும் உள்ளது.

பெரும்பாலும் எமது பிள்ளைகளுக்கு இணைய சூழல் பாதுகாப்பற்றதாகவும், அதற்கு அடிமையாகும் பழக்கத்திற்கும் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. அதன் பாதகமான விளைவுகளால், பிள்ளைகளின் தூக்கம், கல்வி, நட்பு மற்றும் உள ஆரோக்கியம் போன்றவை பாதிக்கின்றன.

இதற்கு அடிமையாகும் பழக்கத்தை நிறுத்த முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் அதை நிறுத்த முயற்சிக்கும்போது பிடிவாதம், கோபம் மற்றும் கூச்சலிடுதல் போன்ற நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். இந்த சிக்கல்கள் அவர்களின் கற்றல் மற்றும் மனநிலையைப் பாதிக்கிறது.

பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தன்னம்பிக்கை இழந்து, துன்பப்படுவதை நாம் கண்டிருக்கிறோம். இணையவழி மிரட்டல்கள் என்பது (Cyber Bullying) மற்றொரு பாரிய அச்சுறுத்தலாகும். மேலும் வயதுக்கு பொறுத்தமற்ற, வன்முறை, பாலியல் அல்லது ஆபத்தான விடயங்கள் (Content) போன்றவற்றால் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

தீங்கு விளைவிக்கும் விடயங்களை மீண்டும் மீண்டும் தூண்டுவதோடு அதற்கு அடிமையாக்கும் பயன்பாடுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று, பிள்ளைகளுக்கு ஆபத்தான விடயங்களை தூண்டும் சில இணையவழி விளையாட்டுகளும் உள்ளன.

அந்தத் தூண்டல்களின் உச்சக்கட்டமாக சிலநேரம் தற்கொலை செய்யும் மனநிலை கூட உருவாகின்றன. எனவே, பல நாடுகளில், இணையப் பயன்பாடு தொடர்பில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது. நமது அணுகுமுறையும் 03 கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

முதலாவதாக,பிள்ளைகளின் பாதுகாப்பு அவசியம். அது நமது அரசாங்கத்தின் அசைக்க முடியாத கொள்கையாகும். இரண்டாவதாக, காரணிகள் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாம் செயல்படுவது மிகவும் அவசியம். நாம் ஒருபோதும் கோஷங்களின் பின்னால் செல்வதில்லை.

மூன்றாவதாக, உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு , அதே வேளையில் அதிகப்படியான கண்காணிப்பை அகற்றுவதே எமது குறிக்கோள். உரிமைகள், பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களையும் சமநிலைப்படுத்துவதே எமது முதன்மையான குறிக்கோள் ஆகும்.

பல நாடுகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த அனுபவங்களை கவனமாக ஆராய்ந்து, நமக்கு ஏற்றவாறு மாற்றி நமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பது காலத்தின் தேவையாகும்.

அதன் முதல் படியாக, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் கலந்தாலோசித்து, சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த தேசிய மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள ஆரோக்கியம், சைபர் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உள்ள நிபுணர்கள், சிவில் சமூகம் மற்றும் இளைஞர்களின் கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தி, இந்தப் பணியில் ஈடுபட வேண்டும்.

இது அரசாங்கத்தால் மாத்திரம் தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சினை அல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட அனைத்து தரப்பினரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும். இது நமது பிள்ளைகள் தொழில்நுட்பத்தை முழுமையாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க உதவும்” என்றார்.

922781602_1124352817138088_5660692993300676305_n

வடக்கு மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு: பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை!

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

photo-collage.png (1)

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தலும், மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வும் நேற்று நவம்பர் 24ஆம் திகதி

jo

ஜோன்ஸ்டனுக்கு அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும்

November 25, 2026

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு

922781602_1124352817138088_5660692993300676305_n

வட மாகாணத்தில் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் அலுவலகம் அமைக்க ஆராய்வு?

November 25, 2026

வடக்கு மாகாணப் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர்

chemmani-gates

எலும்புக்கூடுகளைத் ‘தொற்றுநோய்’ என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்

November 25, 2026

மோகனதாரணி மயூரன்- ஈழ மண்ணின் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தொடரும் மனித உரிமை மீறல்களின் வரிசையில், செம்மணி புதைக்குழி குறித்த

dsfs

முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோகத்தருக்கான மதிப்பளிப்பு

November 25, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, தாயக விடுதலைக்காகத் தமது பிள்ளைகளை உகந்தழித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உரித்துடையோர்களைக் மதிப்பளிப்பு நிகழ்வு நேன்று 24.11.2026

WhatsApp Image 2026-11-25 at 15.36.37

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்தது மாவீரர் நினைவு வளைவு!

November 25, 2026

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது

ipl

2027ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஏழு இலங்கை வீரர்கள்

November 25, 2026

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் ஏழு இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

ha

ஆடைக் கடையில் கொள்ளை

November 25, 2026

ஹட்டன் நகரில் இரவு நேரங்களில் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து இடம்பெற்று வரும் உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுக்கு மத்தியில், நகர

m

நிலவைச் சுற்றி பிரம்மாண்ட சூரிய மின்தகடு வளையத்திலிருந்து அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்?

November 25, 2026

நிலவைச் சுற்றி 6,800 மைல் (சுமார் 11,000 கிலோமீற்றர்) நீளத்திற்கு அமைக்கப்படும் சூரிய மின்தகடுகளின் வளையத்தின் ஊடாக, பூமி முழுவதும்

ha

கல்லரிச்சலில் ஆட்டுப்பண்ணைக்குத் தீ: ஆடுகள் கருகிப் பலி

November 25, 2026

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் 02 பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் ஆட்டுப்பண்ணை ஒன்றுக்குத் தீ வைக்கப்பட்டதில் பண்ணை

sajith-2

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சம் கூடாது!

November 25, 2026

அணிக்கு வீரர்களைத் தெரிவு செய்யும்போது பாரபட்சமற்றதும் வெளிப்படைத்தன்மையுடனும் கூடிய நடைமுறையை இப்போதாவது பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.