நடிகர் அஜித்குமார் கார் தீப்பற்றி எரிந்தது!

டுபாயில் நேற்று 24 மணிநேர கார் பந்தயப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் குமாரின் அணி பங்கேற்றுள்ளது. இந்நிலையில் தான் அஜித் குமாரின் அணியின் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சேர்ந்த ரேசர் அயர்டன் ரொடான்ட் உயிர் தப்பினார். நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேசிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அவர் தனி அணியை உருவாக்கி உள்ளார். ‛அஜித் குமார் ரேசிங்’ என்ற பெயரில் அந்த அணி செயல்பட்டு வருகிறது. […]
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் கவிதை நூல் வெளியீடு

கிளிநொச்சியில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று (17.01.2026) பிற்பகல் நடைபெற்றுள்ளது. மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம் தலைமையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஐபிசி றீச்சா குழுமப் பணிப்பாளர் கந்தையா பாஸ்கரன், சிங்கள எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், ஈழத்து இலக்கிய படைப்பாளிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
அரியாலையில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றியது

யாழ்ப்பாணத்தில் குப்பைக்கு வைத்த தீ வீட்டில் பற்றிக்கொண்டதால், வீடொன்று பகுதிகளவில் தீயில் எரிந்துள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்கள் நேற்றையதினம்(17.01.2026) சனிக்கிழமை வீட்டு வளவுக்குள் இருந்த குப்பைக்கு தீ வைத்து விட்டு வெளியே சென்றுள்ளனர். குப்பையில் பற்றிய தீ அருகில் வீட்டின் கூரையில் பற்றி வீடு தீப்பற்றியுள்ளது. இதனை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் வீட்டின் ஒரு பகுதி தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலணையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
விற்பனைக்கு தயாரான நிலையில் வைத்திருந்த 2350 மில்லிக் கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் வேலணையில் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்படுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் ஆழுகைக்குள் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை இல்லாதொழிக்கும் விசேட நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துவரும் நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலர் […]
தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: “வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த […]
வரட்சியான வானிலை தொடர்கிறது

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜிந்துப்பிட்டி படுகொலை; புர்கா அணிந்து வந்த துப்பாக்கிதாரி

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, இரண்டு சிறுவர்கள் காயமடைந்த சம்பவம், வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் குற்றவாளியான ‘பழனி ரிமோஷன்’ என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி புர்கா அணிந்த பெண்ணைப் போல வேடமிட்டு வந்திருந்தமை சிசிடிவி (CCTV) கெமராக்களில் பதிவாகியுள்ளது. மற்றொரு சந்தேகநபர் கையில் பிஸ்டல் ஏந்தியவாறு நடமாடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது. சந்தேகநபர்கள் தாங்கள் இலக்கு வைத்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த பின்னர், […]
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக காலமானார்

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக இன்று (ஜனவரி 18) அதிகாலை காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயதாகும். மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஆரம்பகால உறுப்பினரான இவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். பின்னர் மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்துகொண்ட அவர், அக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாணந்துறை நகர சபையின் மேயராகவும் பதவி வகித்தார்.
இலங்கையில் அமைத்த மூன்றாவது பெய்லி பாலம்

இலங்கையின் ஏ-492 வீதியில் இந்திய இராணுவம் மூன்றாவது பெய்லி பாலத்தை நிர்மாணித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது, மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவை இணைக்கிறது. அத்துடன், இது ஒரு மாதத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட ஒரு முக்கியமான பாதையை இணைத்துள்ளது. 120 அடி நீளம் கொண்ட இந்த பாலம், ஒபரேசன் சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்திய இராணுவத்தின் பொறியாளர் பணிக்குழுவால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியக் குழுவினர், ஜனவரி மாத ஆரம்பத்தில், ஏ-492 வீதியில் கண்டியை ஊவா […]
இளவாலை – சேந்தாங்குளம் பகுதியில் கஞ்சாப் பொதி மீட்பு

யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இளவாலை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று(17.1.2026) மாலை குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.