மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவன் கைது

குற்றமற்றவள் என நிரூபித்து காட்டு என மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து உனக்கு நீயே தீ வைத்துக் கொள்ளுமாறு வற்றுத்தி தீ வைத்து தீயில் எரிய வைத்த கணவனை கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலையில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி.அனுஷ்வரன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய […]
ராஜீவ் காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி ’’ரிச்சஸ் லங்கா’’ கிரிக்கெட் அணி சாம்பியன்

இந்தியாவில் நடைபெற்ற 51வது ராஜீவ் காந்தி நினைவு சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இருபதுக்கு 20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய “ரிச்சஸ் லங்கா” கிரிக்கெட் அணி, சாம்பியன்ஷிப்பை வென்று நேற்று அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கைக்குத் திரும்பியது. தென்னிந்திய கிரிக்கெட் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்தப் போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 14 அணிகள் பங்கேற்றன, போட்டிகள் ஜனவரி 07 ஆம் திகதி முதல் ஜனவரி 10 ஆம் திகதி […]
இந்தியா பங்களாதேஷை வென்றது

புலாவாயோ, குவீன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (17) நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண சி குழு போட்டியில் பங்களாதேஷை டக்வேர்த் லூயிஸ் முறைமை (DLS) பிரகாரம் 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை இந்தியா ஈட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா சிரமத்துக்கு மத்தியில் 48.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது. முதல் 3 விக்கெட்ளை 53 ஓட்டங்களுக்கு இழந்த இந்தியா பெரும் நெருக்கடிக்குள்ளானது. […]
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு புதிய ‘புள்ளி’ விதிமுறை!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். கேகாலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என […]
புத்தளம் திறந்த பல்கலைக்கழக பிரச்சினைகள்

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தின் பிரச்சினைகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக புத்தளம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளைப் பார்வையிடுவதற்கும் மேற்கொண்ட விஜயத்தின் போதே பிரதமர் புத்தளம் கல்வி நிலையத்தைப் பார்வையிட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது பழைய மருந்துக் களஞ்சியக் கட்டிடமொன்றில் இயங்கிவரும் புத்தளம் கல்வி நிலையத்திற்குப் பதிலாக, புதிய நிரந்தரக் கட்டிடமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் […]
7-வது முறையாக உகாண்டா அதிபராக முசேவேனி
உகாண்டாவின் அதிபராக யோவேரி முசேவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றார். உகாண்டாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 81 வயதான யோவேரி முசேவேனி 71.65 சதவிகித வாக்குகளைப் பெற்று, 7-வது முறையாக மீண்டும் அதிபராக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட 43 வயதான பாபி வைன் 24.72 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார். சுமாா் 4.5 கோடி மக்கள்தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். இருப்பினும், 52 சதவிகிதத்தினர் […]
மிகப்பெரிய இயற்கை ஊதா நிற நட்சத்திர நீலக்கல் அறிமுகம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இயற்கை ஊதா நிற நட்சத்திர நீலக்கல்(Purple Star Sapphire) ஒன்று, உலகளாவிய அறிவியல் மற்றும் பண்பாட்டு பதிவுகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகிலேயே இதன் வகையில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ரத்தினக்கல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஊதா நிற நட்சத்திர நீலக்கல் “ஸ்டார் ஆஃப் பியூர் லேண்ட்” (Star of Pure Land) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரத்தினக்கல், 3,536 கரட் எடையைக் கொண்டதாகும். இது கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக விளக்கக் […]
கனடாவிலிருந்து கியூபெக்கை பிரிப்பது குறித்த வாக்கெடுப்பு நடத்துவோம்!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கியூபெக்கை கனடாவிலிருந்து பிரிப்பது குறித்த பொது வாக்கெடுப்பை (Referendum) நடத்துவோம் என்று, பார்ட்டி கியூபெக்கோவா (Parti Québécois – PQ) கட்சி அறிவித்துள்ளது. அந்தப் கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் (PaulSt-Pierre Plamondon), இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகோல்ட் (François Legault) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளமையை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கியூபெக்கின் இரண்டு முக்கிய கட்சிகள் தற்போது தலைவர்கள் இல்லாத நிலையில் […]
மொண்ட்ரியலில் ‘பொம்பார்டியர்’ விமானத் தயாரிப்பு நிறுவனம் உற்பத்தி மையத் திறனை அதிகரிக்கத்திட்டம்!

உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான ‘பொம்பார்டியர்’ (Bombardier), மொண்ட்ரியலில் உள்ள தனது உற்பத்தி மையத்தின் திறனை இருமடங்காக அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மொண்ட்ரியலில் சுமார் 1,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. சர்வதேச அளவில் ‘பிசினஸ் ஜெட்’ (Business Jets) ரக விமானங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத தேவையைக் கருத்தில் கொண்டு இந்த விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொண்ட்ரியல் – ட்ரூடோ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாம்பார்டியர் உற்பத்தி மையத்தில் இதற்கான பணிகள் 2026-ஆம் […]
கனடா – சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் கார்னி அறிவிப்பு

சீனாவுடன் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தைப் பிரதமர் மார்க் கார்னி நேற்று அறிவித்துள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன மின்சார வாகனங்கள் (EV) மீதான வரி குறைக்கப்பட்டு, அதற்கு ஈடாகக் கனடிய விவசாயப் பொருட்களுக்குச் சீனாவில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் நடத்திய இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அதிரடி முடிவை மார்க் கார்னி அறிவித்தார். 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு கனடிய பிரதமர் […]