நடிகர் கதிர் நடிக்கும் ‘ஆசை ‘

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஆசை’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஷிவ் மோகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆசை ‘திரைப்படத்தில் கதிர் – நடிகை திவ்யா பாரதி ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பாபு குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் என்ற திரைப்படத்திற்கு ரேவா இசையமைத்திருக்கிறார். காதலைப் பற்றிய பற்றி வித்தியாசமாக பேசப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் […]
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ சாதனை

சிவகார்த்திகேயனின் 25வது படமாக கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது ‘பராசக்தி’. கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், பல விவாதங்களை இப்படம் கிளப்பியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன், மதராஸியை தொடர்ந்து ‘பராசக்தி’ படமும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்த நிலையில், பொங்கல் விடுமுறை ஆரம்பித்ததில் இருந்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. […]
அடுத்த படம் தொடர்பாக பிரதீப் ரங்கநாதன்…

பிரதீப் ரங்கநாதன் LIK படத்திற்கு பிறகு நடிக்கப்போகும் படம் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு வருகின்றன. அந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை என்பது குறித்து தற்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்முக்கிய அம்சங்கள்: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளியான டியூட் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பல சர்ச்சைகளை கடந்து இளைஞர்களின் பேராதரவுடன் இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து அவரின் அடுத்த படமான LIK பிப்ரவரி மாதம் ரிலீஸாகவுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]
இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் […]
ஹல்துமுல்லையில் பஸ் கவிழ்ந்து விபத்து: சாரதி பலி – மூவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார். பஸ் சாரதியின் பக்கமிருந்த கதவு திறந்திருந்ததால், அதை மூட முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஒரு தடுப்பில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்த பஸ் நடத்துனர், சிறு குழந்தை மற்றும் பெண் ஒருவர் உட்பட மேலும் மூன்று பேர் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளிடம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவேன் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் உறுதி

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மத்தியில் நிலவும் கரிசனைகள் குறித்து ஜனாதிபதியுடன் நிச்சயமாகக் கலந்துரையாடுவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்திடம் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வேர்த்துக்கும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை (14) யாழில் உள்ள ஜெட்விங் […]
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கடவத்தை பாதையினூடாக வெளியேறும் அனைத்து வாகனங்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை சோதனை செய்யப்பட்டன. போதைப்பொருள் மற்றும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடவத்தை வெளியேறும் இடத்தில் 45 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன அனுமதி பத்திரங்களின்றி வாகனம் செலுத்தியவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது அன்பையே

ஸ்ரீ மகா போதி மற்றும் ருவன்வெலிசாயவைக் கடந்து பெளத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றது வெறுப்பை அல்ல, அன்பையே என ‘சர்வ ஜன அதிகாரம்’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். தொம்பே கப்புகொட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “ஒரு அரசியல்வாதி பௌத்த பிக்குகள் குறித்து விமர்சிப்பதைப் […]
நுவரெலியா மாவட்டத்தில் உறைபனி

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் உறைபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும் வளிமண்டல திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேற்கு, சரகமுவ, மத்திய, வடமேற்கு, உரு-மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், கல்தலா, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என்றும் ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை அன்று 5.30 மணிக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா உறுப்பினர்கள் இந்தியா பயணம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அன்று இந்தியா பயணமானார்கள். இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் […]