அரசியலமைப்பு பேரவையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கட்சிகள் இடையே முறுகல்!

அரசியலமைப்பு பேரவையில் (Constitutional Council) சிவில் சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சபையில் வெற்றிடமாகியுள்ள மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே, இன்னும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அனுலா விஜேசுந்தர, பிரதாப் ராமானுஜம் மற்றும் தினேஷா சமரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், அரசியலமைப்பின் படி, இந்த மூன்று உறுப்பினர்களுக்கு பதிலாக புதிய […]
உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நாமலின் கூட்டத்தால் இடையூறு

தம்புத்தேகம நகரில் நேற்று நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற அரசியல் கூட்டத்தின் போது உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, இலங்கை பொதுஜன பெரமுன அரசியல் கூட்டத்தின் போது எழுந்த பெரும் சத்தம், தம்புத்தேகம தேசிய பாடசாலையில் உள்ள உயர்தரப் பரீட்சை மையத்தில் மாணவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியதாக தேர்வு ஒருங்கிணைப்பாளர் தம்புத்தேகம தலைமையகத்தின் பொலிஸ் மா அதிபருக்குத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டப் பிரதேச அமைப்பாளரை நியமிப்பதற்காக இந்தக் […]
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தையிட்டி குறித்து மௌனம் ஏன் அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி சட்டவிரோத விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டார் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று(18.01.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை […]
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயண வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான வழக்கு தொடர்பான விசாரணை, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க, லண்டன் சென்ற போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையே இவ்வாறு விராஜ் தயாரத்னவின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, லண்டனில் உள்ள வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க சென்றிருந்தபோது, 16.6 […]
கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் எனும் காரணங்களுக்காக என்று முன்மொழியப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஆகியவற்றுக்கு இடையே உள்ள கோவளம் துணை வடிநிலத்தில் ஒரு புதிய நன்னீர்த் தேக்கம் […]
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன் மீதான சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் விடியோ வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் தான் யாரையும் கஷ்டப்படுத்த அப்படி சொல்லவில்லை என்றுகூறிய ஏ.ஆர். ரஹ்மான் பல விஷயங்களைப் பேசிய பிறகு, பேச்சின் முடிவில் ஜெய்ஹிந்த், ஜெய் ஹோ என்றும் கூறினார். பிபிசி ஏசியன் நெட் ஒர்க்கில் அளித்த நேர்காணலில் சமீப காலமாக ஹிந்தி திரையுலகில் வகுப்பு வாத அடிப்படையிலான ஆதிக்கம் மிகுந்து வருவதாகக் கூறினார். மேலும் அதில், ”சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் […]
உலக விமானத் துறையில் பேசுபொருளான எலான் மஸ்க் கருத்து மோதல்

ரயன்ஏர் விமானப் படையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விமானங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை நிறுவ முடியாது என ஓ’லீரி அறிவித்தார். ஆன்டென்னா பொருத்துவதால் விமானத்தின் எடை அதிகரித்து, காற்று இழுப்பு ஏற்பட்டு, எரிபொருள் செலவு உயர்வதாக அவர் விளக்கினார். எலான் மஸ்க் மற்றும் ரயன்ஏர் விமான நிறுவனம் இடையே உருவான கருத்து மோதல், உலக அளவில் கவனம் பெற்ற ஒரு விவகாரமாக மாறியுள்ளது. ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ரயன்ஏர் விமானங்களில் நிறுவுவது தொடர்பாக ஏற்பட்ட இந்த […]
யாருடன் கூட்டணி? டிடிவி, ஓபிஎஸ் பதில்!

அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்பது தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் தலைமையில் தொடங்கப்பட்டது. அதிமுகவில் இருந்த அவர் அங்கு ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். […]
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசாமல் நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக பேசாமல் மௌனமாக நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹயாத்ரி, சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பி. ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திரைப்படத்தை ஜீ […]
‘கட்டாளன்’ படத்தின் டீசர் வெளியீடு

பான் இந்திய நடிகரான அண்டனி வர்கீஸ் நடித்திருக்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பால் ஜோர்ஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காட்டாளன்’ எனும் திரைப்படத்தில் அண்டனி வர்கீஸ், கபீர் துஹான் சிங், சுனில், ஜெகதீஷ், துஷாரா விஜயன், பார்த் திவாரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் . ரெனாடிவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை க்யூப்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது […]