தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தையிட்டி குறித்து மௌனம் ஏன் அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு

தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி சட்டவிரோத விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? என சமூக நீதிக்கான செயற்பாட்டார் அருட்தந்தை மா. சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

இன்று(18.01.2026) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தார்.

இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தி உள்ளார்.

இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே, தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும்.

சட்டம் அனைவருக்கும் சமம். தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?

சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர், சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது? தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல.

மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமை சார் விழாவாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை.

தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள்.

தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய் கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும், தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது.

இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

இது விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே, அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

1200-675-27270261-thumbnail-16x9-ramesh

“பெற்ற மகனையே முறையாக வளர்க்காத மு.க. ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சாடல்

September 14, 2026

திருச்சி: ஆர்ப்பாட்டங்களில் திமுகவினர் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதே அக்கட்சியின் டி.என்.ஏ (DNA) என்றும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ மு.க. ஸ்டாலின்

1200-675-27622338-thumbnail-16x9-ministersrinath

“அஜித் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!” – அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி

September 14, 2026

தூத்துக்குடி: லண்டனில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் சந்திப்பு குறித்தும், சில்வர்ஸ்டோன் கார் பந்தயத் தொடக்க விழா

1200-675-25470070-thumbnail-16x9-admk-aspera

“இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்!” – அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்

September 14, 2026

வேலூர்: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருவதாகவும், தொலைநோக்குச் சிந்தனையுடன் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அவர்

tvk-bus-2

சேலத்தில் தவெக கொடி நிறத்தில் புதிய அரசுப் பேருந்துகள்: போக்குவரத்துத்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை!

September 14, 2026

சேலம்: சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளுக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி

HSJq4ica8AAcl1E

அஜித் – விஜய் சந்திப்பு: தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

September 14, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் குமார் இங்கிலாந்தில் நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் விரைவில் உலகத்தரமான ‘மோட்டார்

27628648_anand

“தவெகவில் இணைய ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை!” – மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளர் மரகதம் குமரவேல் விளக்கம்

September 14, 2026

மதுராந்தகம்: தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலின்

vinayagar (1)

ரூ. 25 லட்ச மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சி ஏலேல சிங்க விநாயகர்!

September 14, 2026

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள ஏலேல சிங்க விநாயகர் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய

elmore

செம்மணி மனித புதைகுழி அகழ்வை உன்னிப்பாக அவதானிக்கின்றோம் – நம்பகதன்மை மிக்க விசாரணை அவசியம் -பிரிட்டன்

September 14, 2026

செம்மணி மனித புதைகுழிகள் குறித்து சர்வதேசதராதரத்திலான நம்பகதன்மை மிக்க வெளிப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என இலங்கையிடம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதாக பிரிட்டன்

Shiranthi-Rajapaksa 1

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்காக பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி துஷ்பிரயோகம்: சிறாந்தி ராஜபக்ஷவிடம் எஃப்பிஐடி விசாரணை நடத்த தீர்மானம்

September 14, 2026

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டீ ஸ்கேனர் (CT scanner) இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்வதாகக் கூறி, தேசிய

Namal-750x422

விமானங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி – நாமல் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.

September 14, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் பொதுஜனபெரமுன

202606093819488

“எந்தத் துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்!” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்ட விளக்கம்

September 14, 2026

திருநெல்வேலி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், துண்டுச் சீட்டு மூலம் வந்த உத்தரவுக்கே சபாநாயகர் அடிபணிந்தார் என்ற

srilanka un peace keeping

ஹெய்ட்டிக்கு படையினரை அனுப்புவதற்கு முன்னர் அவர்களின் கடந்காலங்கள் குறித்து நன்கு ஆராய்ந்தோம் – இராணுவ பேச்சாளர்

September 14, 2026

ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் வன்முறைக் கும்பல் தடுப்புப் படையில் (GSF) இலங்கை அமைதி காக்கும்