இலங்கையின் ஏ-492 வீதியில் இந்திய இராணுவம் மூன்றாவது பெய்லி பாலத்தை நிர்மாணித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது, மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியாவை இணைக்கிறது.
அத்துடன், இது ஒரு மாதத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்ட ஒரு முக்கியமான பாதையை இணைத்துள்ளது.
120 அடி நீளம் கொண்ட இந்த பாலம், ஒபரேசன் சாகர் பந்து திட்டத்தின்கீழ் இந்திய இராணுவத்தின் பொறியாளர் பணிக்குழுவால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியக் குழுவினர், ஜனவரி மாத ஆரம்பத்தில், ஏ-492 வீதியில் கண்டியை ஊவா மாகாணத்தின் பதுளையுடன் இணைக்கும் பாலத்தை அமைத்தமை குறிப்பிடத்தக்கது.