முதலீடுகளுக்கான சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்

தற்போதைய நிலைக்கு அமைய சரியான கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளின் காரணமாக நாம் தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியுள்ளதுடன், எமது வரவு செலவுத் திட்டத்திலும் தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாடு – 2025 இல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு […]

விசாரணைக் கைதி செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு விளக்கமறியல்

பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கனகராசா ஜீவராசா என்ற “யாழ்ப்பாண சுரேஷ்” மற்றும் அந்தோணிப் பிள்ளை ஆனந்தம் ஆகியோர் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 1. கனகராசா ஜீவராசா அல்லது “யாழ்ப்பாண சுரேஷ்”: செவ்வந்தியைப் போல் ஒத்திருக்கும் “தாக்ஷி” என்ற பெண்ணை அறிமுகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர். 2. யாழ்ப்பாணத்தைச் […]

வடக்கு உள்ளுராட்சி தலைவர்கள் செயற்பட்ட விதம் குறித்து அமைச்சர் பாராட்டு

நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் போது வடக்கிலுள்ள உள்ளுராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பூரண ஆதரவை வழங்கினர் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வடக்கில் அதிகமான உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள். அவர்கள் எங்களிடம் கதைத்து உதவிகளை கேட்டனர். நாங்கள் முழுமையான ஆதரவை வழங்கினோம். அடைக்கலநாதன் […]

அனர்த்தநிலை குறித்து ஆராய பிரதி அமைச்சர் பிரதீப் கள விஜயம்

தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று புதன்கிழமை (03) அப்பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஹட்டன் TVTC தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து அவர்களது குடும்பங்கள் அனர்த்தத்தால் எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களின் குடும்பத்தினருக்கான அவசர நிவாரணங்கள் […]

இலங்கைக்கு அவசர உதவியை வழங்கும் ஐக்கிய இராச்சியம்

இலங்கையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஐக்கிய இராச்சியம் 890,000 அமெரிக்க டொலர்கள் (£675,000 பவுண்ட்கள் ) மதிப்பிலான அவசர மனிதாபிமான நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த உதவிகளை, செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. முகவரமைப்புக்கள், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்கனவே செயற்பட்டுவரும் மனிதாபிமான அமைப்புகளின் பங்காளர்கள் மூலம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக கூடாரம், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் வாழ்க்கையை பாதுகாக்க அவசியமான உதவிகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளன. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடனான சந்திப்பின் […]

அனர்த்த நிலைமை; உயிரிழப்புகள் 479 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதுடன், 350 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் […]

இடர் பாதிப்புகளைத் தணிக்க வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

உலகளாவிய வானிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (03) சந்தித்துப் பேச்சு நடத்தினார். அதன் போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் […]

சீன பெண்கள் சம்மேளனத்தினால் சுகாதாரப் பொருட்கள் வழங்கல்

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்களை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் முன்முயற்சியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அனைத்து சீன பெண்கள் சம்மேளனம் (All-China Women’s Federation – ACWF) 1,000,000 யுவான் (சுமார் 43 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பொருட்கள் தொகுதியை நன்கொடையாக வழங்கியிருந்தது. இலங்கை பாராளுமன்ற பணியாளர்களுக்கு […]

இலவச பாடநூல் திட்டம்; தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களில் தமிழர் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. வரலாறு, சித்திரம் போன்ற பாடங்களில் தமிழ் மன்னர்களின் பெயர்கள், அக்கால இலச்சினைகள்,கல்வெட்டுக்கள், திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளன. 1982 களில் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்ட பின் தமிழர்கள் வரலாறு திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி சீர்த்திருத்தத்தில் இந்த தவறு திருத்தப்படுமா என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் பிரதமரிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) […]

மஹபொல கொடுப்பனவு அதிகரிப்பு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை சிரமமின்றி மீண்டும் ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, இதற்கு முன்னர் கடந்த 28 ஆம் திகதியும் மஹபொல தவணைக்கட்டணம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள மஹபொல தவணைக்கட்டணத்தை எதிர்வரும் 05 […]