இடர் பாதிப்புகளைத் தணிக்க வடமாகாண மக்களுக்கான உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியுள்ள இந்தியா

உலகளாவிய வானிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (03) சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அதன் போது, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறிய கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, உடனடி உதவிகள் (நிவாரணம்), மீள்கட்டுமான உதவிகள் (வாழ்வைக் கட்டியெழுப்புதல்), நிரந்தரத் தயார்ப்படுத்தல் (எதிர்கால இடர்களை எதிர்கொள்ளல்).

வடக்கு மாகாண மக்களுக்கான தற்போதைய உடனடித் தேவைகளின் பட்டியலை வழங்கினால், உதவிகளை விரைந்து வழங்க முடியும்.

அழிவடைந்த உட்கட்டுமானங்களின் சேத விவரங்களையும் வழங்குங்கள்

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அடிக்கடி நிகழக்கூடிய இத்தகைய இடர்பாதிப்புகளைத் தணிப்பதற்கான நிரந்தரக் கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது போன்று இங்கும் உருவாக்குவதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்க முடியும் என கூறினார்.

அதற்கு பேரிடர்களின் போது எப்போதும் முதலாவதாக கைகொடுப்பது இந்தியாதான் என்று குறிப்பிட்ட ஆளுநர், அதற்காக மாகாண மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் கூடுதலான அழிவுகளையும், அதிக உட்கட்டுமான அழிவுகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இறங்குதுறைகள், போக்குவரத்து வீதிகள், பாலங்கள், சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் என பல்வேறு உட்கட்டுமானங்கள் அழிவடைந்துள்ள விவரங்களை அவர் முன்வைத்தார்.

வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் முகாம்களிலிருந்து படிப்படியாக வீடுகளுக்குத் திரும்புகின்றனர். பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்பாகவும், மக்களின் வாழ்வாதாரம் சில இடங்களில் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பேரிடரின்போது இந்தியாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கொன்சியூலர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.

தினமும் நிவாரணப் பொருள்களுடன் விமானங்கள் வருகின்றமையையும், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் கொழும்பை வந்தடைந்துள்ளமை தொடர்பாகவும் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

WhatsApp Image 2026-09-20 at 8.44.04 PM

எரிபொருள் விலை மீண்டும் உயருமா..! அவசர பேச்சுக்கு தயாராகும் இலங்கை

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மீதான நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய எரிபொருள் மானியத்

WhatsApp Image 2026-09-20 at 8.39.41 PM

ஜனநாயகத்துக்கு எதிராக செயற்படவில்லை… வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

September 20, 2026

ஜனநாயகத்தை இல்லாதொழித்து நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. நிறைவடைந்த 2 ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்துக்கு எதிராக நான் செயற்படவில்லை.

WhatsApp Image 2026-09-20 at 8.35.22 PM

காணிகளை விடுவிக்காது ஏமாற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்! பலாலி மக்கள் குற்றச்சாட்டு

September 20, 2026

மக்களின் காணி மக்களுக்கு என வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர தலைமையிலான அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் வலி

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை

as

ஆசியப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை

September 20, 2026

சியப் போட்டிகளின் பெண்களுக்கான கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்

harry meghan

ஹரி மற்றும் மேகன் மீதான ஊடகங்களின் கையாளுதல் டயானாவுக்கு நேர்ந்ததை நினைவுபடுத்துகிறது: BBC நேர்காணலில் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவிப்பு

September 20, 2026

தனது சகோதரி வேல்ஸ் இளவரசி டயானாவிற்கு நேர்ந்ததைப் போலவே, சசெக்ஸ் டியூக் மற்றும் டச்சஸ் (இளவரசர் ஹரி மற்றும் மேகன்)

macron1

ஐரோப்பாவிற்கு எதிரான ரஷ்யாவின் கலப்புத் தாக்குதல்கள் தீவிரமடைகின்றன: மெக்ரோன் எச்சரிக்கை

September 20, 2026

ஐரோப்பாவிற்கும் பிரான்ஸிற்கும் எதிராக ரஷ்யா மேற்கொள்ளும் கலப்புத் தாக்குதல்களின் (Hybrid attacks) அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மெக்ரோன்

chowbradford-stockphoto-december2024-1024x576

டோரண்டோ மேயர் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதாக புதிய கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது

September 20, 2026

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற முதல் மேயர் விவாதத்திற்குப் பிறகு, டோரண்டோ மேயர் பதவிக் களம் தீவிரமடைந்து ‘கடும் போட்டி