அனர்த்தநிலை குறித்து ஆராய பிரதி அமைச்சர் பிரதீப் கள விஜயம்

தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று புதன்கிழமை (03) அப்பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார்.

ஹட்டன் TVTC தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து அவர்களது குடும்பங்கள் அனர்த்தத்தால் எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களின் குடும்பத்தினருக்கான அவசர நிவாரணங்கள் தாமதமின்றி வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் அங்கு இருந்தபோதே தொலைபேசியில் கலந்துரையாடி உடனடி தீர்வுகளை அறிவுறுத்தினார். அதனுடன், கற்கைநெறி விருத்தி, தரநிலைகள் உயர்த்தல் மற்றும் மாணவர் உள்ளீர்ப்பு அதிகரிப்பு தொடர்பான விவகாரங்களும் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.

பின்னர் தலவாக்கலை–வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டப்பகுதிக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு பாதிப்புகளும் பிரிதி அமைச்சர் பிரதீப் அவர்களால் நேரில் பார்வையிடப்பட்டன. மண்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மண் அகற்றும் பணிகள், வீதிகள் மறுசீரமைப்பு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பான பயண வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டம் மற்றும் மடகும்புர தெற்கு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை பிரதி அமைச்சர் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் உணவு, நீர், உடைகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.

அனர்த்தத்தில் சிக்கிய ஒவ்வொருவரின் பாதுகாப்பும் நலனும் எங்களின் முதன்மை. அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஒருமித்த முறையில் நிவாரண நடவடிக்கைகளை செயற்படுத்துகிறது. யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

தலவாக்கலை–வட்டகொடை பகுதி மக்கள் எதிர்நோக்கும் உடனடி சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களைத் தவிர்க்க வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த கள விஜயத்தின் போது, பிரதி அமைச்சருடன், கொட்டகலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யாகுலமேரி, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன், அகரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான கவிஷான், மற்றும் பிரபு, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் றொஹான், பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களான வசந்தமூர்த்தி மற்றும் சிவநேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

court-judge-hammer-gavel-696x398

SJB நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு 1½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

July 28, 2026

2019 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதுளை

758874719_1597010588461601_4345952432120067241_n

காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி…!

July 28, 2026

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

SAUDHI COURT

சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு

July 28, 2026

சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல

E7OQZHSI4BFLXIQ6AVSVBLR2IE

பெர்லின் பிரைட் (Berlin Pride) நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியல் ஃபியர்டே (Fierté Montreal) பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

July 28, 2026

கடந்த வார இறுதியில் பெர்லின் பிரைட் நிகழ்வில் ஒரு நபர் கொல்லப்பட்டுப் பல காயமடைந்த தாக்குதலைத் தொடர்ந்து, மொன்றியல் ஃபியர்டே

IHRULYUKZJG3VPPAZFZSRKMH2M

சிறுவர்களை காரில் வைத்துக்கொண்டு அதிவேகமாக காரைச் செலுத்திய ஓட்டுநருக்கு வழக்கு பதிவு

July 28, 2026

திங்கட்கிழமை காலை 10 ஆவது வீதியில் (10th Line) மணிக்கு 50 கி.மீ வேகம் அனுமதிக்கப்பட்ட பகுதியில், மணிக்கு 93

savak

சாவகச்சேரி நகர சபையின் விசேட கூட்டம்

July 28, 2026

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி

arjun

அர்ச்சுனா இராமநாதனுக்குப் பிணை

July 28, 2026

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்று (27) ஒரு சட்டத்தரணி

ne

நீர்கொழும்பு சிறை கலவரம்;சந்தேக நபர்களாக நால்வர்!

July 28, 2026

அண்மையில் நடைபெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் தொடர்பில் நான்கு பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் மற்றும் 6ஆம்

ner

அரச சேவையில் தேசிய நேர்மை வாரம்!

July 28, 2026

அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா”

photo-collage.png (3)

ஓகஸ்ட் 30; சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் குறித்த விசேட சந்திப்பு

July 28, 2026

எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில்

sea

அவசர வானிலை எச்சரிக்கை!

July 28, 2026

பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது

sa

நாட்டை அரசாங்கம் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது…

July 28, 2026

தற்போது இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள்