நிவாரணம்
பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரிடர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் 20 இந்திய இராணுவ அதிகாரிகள் கொண்ட குழு பதுளைக்கு வந்துள்ளது. By C.G.Prashanthan
புனர்வாழ்வு பயனாளிகள் பற்றிய தகவல்!
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெறுகின்ற பயனாளிகள் மற்றும் பணியாளர்களையும் இன்று இராணுவத்தின் உதவியோடு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். By C.G.Prashanthan
ஈச்சலம்பற்று மருத்துவமனையும் மூழ்கியது!
மகாவலி நதி பெருக்கெடுத்ததால், வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பல கிராமங்கள் நீரில் மூழ்கின, அதே நேரத்தில் ஈச்சலம்பற்று பிரதேச மருத்துவமனையும் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. By C.G.Prashanthan
அரசாங்கத்தின் திறமையின்மையும் அலட்சியப் போக்குமே பேரழிவுக்குக் காரணம் – மரிக்கார்
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவு தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இன்று (01) ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் அலட்சியப் போக்கே இந்தப் பேரழிவுக்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டினார். முக்கிய குற்றச்சாட்டுகள் * முன்னெச்சரிக்கை புறக்கணிப்பு: நவம்பர் 12ஆம் திகதியே புயல் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் முன் […]
விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பல்!
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பகுதிகளுக்கு விமானப்படை விமானங்களின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் திருகோணமலை மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இலங்கை விமானப்படையின் Y – 12 ரக விமானம் 30.11.2025 அன்று ரத்மலான விமானப்படை தளத்திலிருந்து சீனாக்குடா விமானப்படைத்தளத்தை வந்தடைந்தது. திருகோணமலை விமானப்படை தளத்தில் இருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் […]
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்; சஜித் பிரேமதாச கொரிய தூதுவர் சந்திப்பு!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரிய தூதுவரை சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்திப்பை மேற்கொண்டதோடு, தற்போதைய […]
யாழ்.காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார். அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு […]
இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம்; 157 பேர் மீட்பு
மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 157 பேரை கடற்படையினர் மீட்டனர். மன்னாரின் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நூற்று ஐம்பத்தேழு (157) பேரை கடற்படை அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் மூலம் மீட்ட பின்னர், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் வழங்க கடற்படையால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மன்னார், சித்தும்நகர், ஆனமோட்டை, செட்டிகுளம் மற்றும் சிவபுரம் ஆகிய கிராமங்கள் இலுப்பைக்கடவை பகுதியில் உள்ள குராய் மற்றும் செட்டிகுளம் […]
தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – ஜயதிஸ்ஸ முனசிங்க
வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார். தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் […]
களனி கங்கையின் நீர்மட்டம் 8.45 அடியாக உயர்வு
நாகல்கம் தெருவில் களனி கங்கையின் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 8.45 அடியாக வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. கடவத்த, அம்பத்தலே, களனி, மாலபே மற்றும் களனி ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அனைத்து தாழ்வான பகுதிகளுக்கும் வெள்ள நீர் அச்சுறுத்தலாக இருப்பதால் அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். களனி பிரதேச செயலகத்தில் நிலைமை மோசமாக உள்ளது, அங்கு சின்ஹார்முல்ல, பிலப்பிட்டி, பெத்தியகொட மற்றும் பேலியகொட உள்ளிட்ட கிராமங்கள் அதிக ஆபத்து எச்சரிக்கையின் […]