தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் – ஜயதிஸ்ஸ முனசிங்க

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க, இன்று (01) முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால அனர்த்த சூழ்நிலையில் கொள்வனவு நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளருக்கும் 50 மில்லியன் ரூபா வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

மேலும், உலர் உணவுக்காக இதுவரை பணத்தை வங்கியில் வைப்பிலிடும் முறைக்கு மேலதிகமாக தேவைக்கேற்ப உலர் உணவுப் பொருட்களை பொதியாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் தமது பகுதிகளில் நிலவும் விசேட நிலைமைகளின் அடிப்படையில் பொருத்தமான குழுவொன்றின் மூலம் முடிவுகளை எடுக்கத் தேவையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக உலர் உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் பணம் 07 நாட்களுக்காக ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும், அதனை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம் என்றும், தனி நபருக்கு 2100 ரூபா, இரண்டு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 4200 ரூபா மற்றும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 6300 ரூபா, நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 8400 ரூபா மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 10,500 ரூபா என்றவகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க, இது தொடர்பாக சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக வீடுகளை சேறு, மண் மற்றும் குப்பைகளிலிருந்து சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால், இதற்காக சுற்றறிக்கை 1(2025) இன் பிரிவு 5(2) திருத்தப்பட்டுள்ளது என்றும், அதன்படி, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் சுகாதார நிலைமைகளை சீர்செய்யவும் அதை வசிக்கக் கூடிய வீடாக மாற்றவும் 10,000 ரூபா முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, வீட்டின் உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் உரிய முன்பணத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுற்றறிக்கையை பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா நேற்று வெளியிட்டதாகவும் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பாடல் நடவடிக்கைகளை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நேரத்தில் நிவாரணப் பணியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருவதால், பொதுமக்கள் தமது முழுமையான ஆதரவை அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

By C.G.Prashanthan

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.