கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் செம்மணி அநீதிக்கு விசாரணை வேண்டுமென சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தலைநகர் ஒட்டாவாவில் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் இந்தோ – பசிபிக் பிராந்தியத்துக்கான உதவிப் பிரதி அமைச்சர் வெல்டன் எப், இலங்கைத் தொடர்புகளுக்கான பிரதிப் பணிப்பாளர் டெய்ட்ரே யூகிச் மற்றும் சிரேஷ்ட அதிகாரி அரியேல் சொபானி ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

​இச்சந்திப்பின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், நில ஆக்கிரமிப்பு மற்றும் நீதி மறுக்கப்படுவது தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் இதுவரை 583 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி., சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய சுயாதீனமான தடயவியல் விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

​அத்துடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்தும் கனேடிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 171 ஏக்கர் பூர்வீகக் காணிகளையும், யாழ். வலிகாமம் வடக்கில் 2,117 ஏக்கர் காணிகளையும் உடனடியாக உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தையிட்டி காணிப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

​தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மறுக்கப்படுவதுடன், நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுச் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தையும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து ஆண்டுகள் பல கடந்தும் தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேற முடியாத சூழல் தொடர்வதையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளதையும் எடுத்துரைத்த தமிழ் அரசுக் கட்சியின் குழுவினர், சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகள் ஊடாக கனடா தனது இராஜதந்திரப் பங்களிப்பைத் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

​இச்சந்திப்பின் நிறைவில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செம்மணிப் படுகொலை, கேப்பாப்பிலவு மற்றும் வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புகள் தொடர்பான விரிவான ஆவணத் தொகுப்புகள் கனேடிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

WhatsApp Image 2026-10-25 at 07.00.24

கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் செம்மணி அநீதிக்கு விசாரணை வேண்டுமென சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

October 25, 2026

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத்

Harini-amarasooriya

பிரதமர் ஹரிணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

October 25, 2026

உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி

Ila

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்பு: முக்கிய நடவடிக்கை!

October 25, 2026

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்புத் தொடர்பாக ஜனாதிபதியினதும் அமைச்சினதும் திணைக்களத்தினதும் ஊடகங்களினதும் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதம் எழுத்தாளர்களின்

arr

குடு அஞ்சுவின் போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது!

October 25, 2026

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு அஞ்சு என்பவனின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

Ara

இராணுவத்தின் புதிய பணிக்குழாம் பிரதானி நியமனம்!

October 25, 2026

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்

de

சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 25, 2026

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம்

dailythanthi_2026-10-24_tckhmfxr_Hero (1)

“பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5.32 லட்சம் சூப்பர் சைக்கிள்கள்!” – ஹீரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம்!

October 24, 2026

சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின்கீழ் பல்வேறு மாபெரும் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வெளியிட்டுள்ளார். அதன்படி

7

“ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 24, 2026

சென்னை: ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

CTR-Nirmal-kumar-TVK-minister-ed

“திமுக – அதிமுக தவறுகளால் பல இடைத்தேர்தல்கள் வரும்!” – அமைச்சர் நிர்மல் குமார்!

October 24, 2026

சிவகங்கை: திமுக மற்றும் அதிமுக கட்சிகள் செய்த பல்வேறு தவறுகளால் இனி வரும் காலங்களில் பல இடைத்தேர்தல்கள் உறுதியாக வரும்

1291252

“பாஜக மாடல் தவெக அரசு!” – கார்த்திகா கைதைக் கண்டித்த அரசியல் தலைவர்களுக்கு சீமான் நன்றி!

October 24, 2026

சென்னை: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரைத் தவெக அரசு சமீபத்தில் அநீதியாகக்

tamil-nadu-people-welcome-vijay-as-their-chief-minister-says-tvk-mla-maria-wilson-1200x900 (2)

“தனுஷ் விஜய்க்கு போட்டியா?” – அமைச்சர் மரிய வில்சன் பதில்!

October 24, 2026

சென்னை: நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியலுக்கு வந்தால், தமிழ்நாடு அரசியலில் அவர் தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு

3

“உதகையில் மண் சரிவில் சிக்கிய அரசுப் பேருந்து – ஓட்டுநர் உயிரிழப்பு!” – இன்று முதல் இரவு நேரப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள்!

October 24, 2026

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிபயங்கர கனமழை காரணமாக உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மிகக் கடுமையான