குடு அஞ்சுவின் போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு அஞ்சு என்பவனின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாத்தறை, அக்குரஸ்ஸப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவராவார். அவரது வசம் இருந்து 500 கிராம்களுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருட்களைப் போக்குவரத்து செய்வதற்கு ஒரு தடவைக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரையிலான தொகையை ‘குடு அஞ்சு’ இவருக்கு வழங்குவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் […]
இராணுவத்தின் புதிய பணிக்குழாம் பிரதானி நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சம்பத் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவப் தளபதியால் வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நியமனமானது எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் தனமல்வில, போதாகம, மீகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத இளைஞன் என தெரியவந்துள்ளது. கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான, குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிகவெவ 280 வத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த தென்னந்தோட்டத்தைச் சுத்தம் செய்வதற்காக குறித்த இளைஞர் நேற்று அங்கு சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், அவர் மீண்டும் வீடு […]