யாழ்.காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.

நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட சுகாதார அபாயங்களைத் தவிர்க்க அத்தியாவசிய மருத்துவ வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெள்ளநீரில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மருத்துவ குழுக்கள் அனுப்புதல், அவசர மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், மாவட்ட செயலாளர், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அமைச்சர் அவசர ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்தினார். வெள்ளநீர் வெளியேற்றம் செய்ய வேண்டிய பகுதிகள், தாழ்வான இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகள், படகு மற்றும் வாகன வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

குறிப்பாக, இன்னும் வடமாகாணத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்பதற்காக கூடுதல் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர், வீதி தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீளமைக்கும் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பே முதலாவது முன்னுரிமை எனவும், அரசு சார்பாக எந்தவித தாமதமும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் முழுவதும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை குறையும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

OpenAI

மனித உருவ ரோபோ உருவாக்கும் Open AI!

October 25, 2026

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதில் OpenAI ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். தற்போது, ​​அந்நிறுவனம் மனித உருவ ரோபோக்கள் துறையிலும்

images (1)

எடைக்குறைப்புக்கு எது சிறந்தது?

October 25, 2026

எடை குறைக்கவும், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் பலரும் பிளாக் காபி மற்றும் கிரீன் டீயை தங்களது தினசரி உணவுப்

s

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளுக்கான தேவைகள்!

October 25, 2026

5 வயது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள்

cu

வெள்ளரிக்காய் குளிர்க்காலத்தில் சாப்பிடலமா?

October 25, 2026

கோடைகாலம் மட்டுமின்றி தினமும் சாப்பிட வேண்டிய ஒரு அருமையான காய் வெள்ளரிக்காய். வெள்ளரிக்காயில் 95% தண்ணீர் நிறைந்துள்ளதால், உடலை எப்போதும்

WhatsApp Image 2026-10-25 at 07.00.24

கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் செம்மணி அநீதிக்கு விசாரணை வேண்டுமென சிறீதரன் எம்.பி. கோரிக்கை!

October 25, 2026

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினர், கனேடிய வெளிவிவகாரத்

Harini-amarasooriya

பிரதமர் ஹரிணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

October 25, 2026

உயர்ந்த தகுதிகளும் திறமைகளும் கொண்ட மனிதவளத்தை கல்வி அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கான முறையான வேலைத்திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி

Ila

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்பு: முக்கிய நடவடிக்கை!

October 25, 2026

இலங்கையில் தொடர்ந்து வரும் புத்தகத் தடுப்புத் தொடர்பாக ஜனாதிபதியினதும் அமைச்சினதும் திணைக்களத்தினதும் ஊடகங்களினதும் தலையீட்டைக் கோரி இந்தக் கடிதம் எழுத்தாளர்களின்

arr

குடு அஞ்சுவின் போதைப்பொருள் விநியோகஸ்தர் கைது!

October 25, 2026

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குடு அஞ்சு என்பவனின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த நபர் ஒருவர் மேல்மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால்

Ara

இராணுவத்தின் புதிய பணிக்குழாம் பிரதானி நியமனம்!

October 25, 2026

இலங்கை இராணுவத்தின் 71 ஆவது பணிக்குழாம் பிரதானியாக (Chief of Staff) இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல்

de

சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 25, 2026

தனமல்வில, நிகவெவ பகுதியில் அமைந்துள்ள கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம்

dailythanthi_2026-10-24_tckhmfxr_Hero (1)

“பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5.32 லட்சம் சூப்பர் சைக்கிள்கள்!” – ஹீரோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம்!

October 24, 2026

சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின்கீழ் பல்வேறு மாபெரும் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வெளியிட்டுள்ளார். அதன்படி

7

“ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?” – அமைச்சர் ராஜ்மோகன்!

October 24, 2026

சென்னை: ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகள் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்