பண்ணையில் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு
முல்லைத்தீவு முத்தியங்காட்டு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, குமுளமுனை, நீத்தகை மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளையும், ஒரு சிறுவனையும் முல்லைத்தீவு மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் குழு திங்கட்கிழமை (01) அன்று பாதுகாப்பாக மீட்டனர்.
நிதியுதவி வழங்கும் நியூசிலாந்து
சர்வதேச மனிதாபிமான கூட்டாளி மூலம் அவசரகால மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இலங்கைக்கு 1 மில்லியன் நியூசிலாந்து டொலர்களை பங்களிப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து அரசாங்கமும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது இரங்கலையும் எண்ணங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், […]
ரணில் விக்ரமசிங்க கொழும்பில் அவசர கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித்தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சூறாவளியை தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, புதன்கிழமை (03) கொழும்பில் உள்ள அலுவலகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கூட உள்ளனர். ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடுமையான இயற்கை பேரிடரை வெற்றிகரமாக எதிர்கொண்டதில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு […]
மீட்பு நடவடிக்கையில் முப்படை
சீரற்ற கால நிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 22232 குடும்பங்களை சேர்ந்த 72254 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 212 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 25.11.2025 _2025.12.01 இன்று (01) மதியம் 12. 00மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 17004 குடும்பங்களை சேர்ந்த […]
விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை
பேரிடர் பாதித்த பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுப்பாடற்ற செயல்பாடு முக்கியமான மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. அதன்படி, அனைத்து ட்ரோன்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளையும் 011-2343970, 011-2343971 அல்லது 115 ஹொட்லைன் மூலம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய யாழ். இளைஞனின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்தில் சென்ற நிலையில், சீரற்ற காலநிழலை காரணமாக கலா ஓயா பகுதியில் வெள்ளத்தால் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பலர் வீட்டொன்றின் கூரையில் இருந்து மீட்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞர் காணாமல் போயிருந்தார். இதன்படி, காணாமல் போயிருந்து குறித்த இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனியார் வங்கியொன்றின் யாழ். கிளையின் முகாமையாளராக பணியாற்றிய நிகேதன் என்ற […]
சேதமடைந்த சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடல்
கனமழையால் சேதமடைந்த சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று வைத்தியசாலை பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சுமித் அத்தநாயக்க தெரிவித்தார். வைத்தியசாலை ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், தற்போது வைத்தியசாலை ஐந்து அடிக்கும் அதிகமான தண்ணீரால் நிரம்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு வெளியேற்றப்பட்டதாகவும், வெள்ள நீர் மட்டம் ஓரளவு குறைந்த பிறகு, கடற்படை மற்றும் […]
பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு?
நாடாளவிய ரீதியில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக அரசாங்கம் திணறி வரும் நிலையில், பொதுமக்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் விமானி உயிரிழந்துள்ளார். 41 வயதான விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஹெலிகொப்டர் தரையிறக்குவதற்கு நீண்ட நேரம் முயற்சித்த போதும், அங்கு வேடிக்கை பார்க்கை சென்ற மக்களால் தரையிறக்க முடியாத நிலை […]
அவுஸ்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
டிட்வா சூறாவளிக்கு இலங்கையின் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் 1 மில்லியன் அவுஸ்திரேலியா டாலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கும் என்று அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகராலயம் நவம்பர் 30, 2025 அன்று அறிவித்தது. இலங்கை முழுவதும் வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை அவசரமாக வழங்குவதை ஆதரிப்பதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியா மனிதாபிமான பங்காளிகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் அரசு சாரா நிறுவனங்களுடன் […]
வைத்தியசாலை இயக்கம்!
மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக மாற்றுப்பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் செயற்படுகின்றது. By C.G.Prashanthan