இந்திய அவசர மருத்துவமனை அமைப்புகள் இலங்கையை வந்தடைந்தன!
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு அவசர மருத்துவமனை அமைப்புகள், அதற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் குறித்த மருத்துவமனை அமைப்புகள் தொடர்பாக பயிற்சி அளிக்க இந்திய இராணுவ மருத்துவர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு சிறப்பு விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
ஜனவரி இறுதிப்பகுதி வரை மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும்!
மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது […]
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு கடற்படையினர் உதவி
யாழ்ப்பாணம், அனலத்தீவிலிருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிப்பதற்கு கடற்படையினர் உதவினர் யாழ்ப்பாணம் அனலத்தீவு தீவில் இருந்து நோய்வாய்ப்பட்ட குழந்தையை அவசர சிகிச்சைக்காக கடற்படையின் படகின் மூலம் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை தீவில் உள்ள கரம்பன் இறங்குத்துறைக்கு கொண்டு வர கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். By C.G.Prashanthan
இலவச சிகிச்சை
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், எலி காய்ச்சலை தடுக்கும் முழு சிகிச்சையையும் (Doxycycline) இலவசமாக பெற்றுக் கொள்ள பிரதேசத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தையோ அல்லது பிரதேச பொது சுகாதார அதிகாரியையோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சிக் குழு வருகை
இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை அவசர மருத்துவ சிகிச்சையை மதிப்பீடு செய்து, அந்தத் தகவலை ஜப்பானிய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவதற்காக, ஜப்பானிய சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 5 மருத்துவர்கள் உட்பட , ஜப்பானிய அரசாங்க தொடர்பு அதிகாரிகள் கொண்ட குழுவே இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளது.
நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இருவர் மரணம்
நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர். கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார், அதேவேளை வயதான […]
நிலச்சரிவால் ரத்தோட்டையில் சிக்கியிருந்த 400 பேர் மீட்பு
ரத்தோட்டையில் சிக்கித் தவித்த 400 பேர் மீட்கப்பட்டனர் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்த ரத்தோட்டையில் உள்ள நாகலா மற்றும் இங்குராவத்தையைச் சேர்ந்த 400 பேரை மீட்கும் நடவடிக்கை நேற்று பிற்பகலுக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்தார்.
பாதுகாப்பான குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை
சப்ரகமுவ மாகாணத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான குடியிருப்புகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புக்களின் நிலைமை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) அன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார். பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கோரிக்கைக்கு […]
வட்டுவாகல் பாலம் கடும் சேதம்
வட்டுவாகல் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கேப்பாப்பிலவு வீதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகு வாகனங்கள் பயணம் செய்யலாம் எனவும் ஆகையால், தயவுசெய்து கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்துமாறும் பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
பேலியாகொட பாலத்தின் நிலை
தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் மக்கள் வசிக்கும் நிலைமைகள்.