பாதுகாப்பான குடியிருப்புகளை வழங்க நடவடிக்கை

சப்ரகமுவ மாகாணத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை விரைவில் பாதுகாப்பான குடியிருப்புகளில் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக ஆபத்தான குடியிருப்புக்களின் நிலைமை குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) அன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஆளுநர் இவ்வாறு கூறினார்.

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் கோரிக்கைக்கு அமைய இரத்தினபுரி மாவட்ட செயலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை(30) வரை இரத்தினபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,770 ஆகும்.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் சுமார் 14,448 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

முழுமையான 3 குடியிருப்புகள் சேதமடைதுள்ளதாகவும், பகுதியளவில் 996 குடியிருப்புகள் சேதமடைதுள்ளதாகவும் மற்றும் 4 வர்த்தக நிலையங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் மலையக தோட்ட பகுதிகளைச் சேர்ந்த 339 குடும்பங்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலான குடும்பங்கள் அதிக ஆபத்தான குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஆவர்.

அவர்களை மீண்டும் அந்த குடியிருப்புகளில் குடியமர்த்த முடியாதமையால், வேறு தற்காலிக இடங்களில் குடியமர்த்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மலையக தோட்ட குடியிருப்புகளின் அருகில் அபாயமான நிலையில் உள்ள தேக்கை, கினி கூறு, தென்னை, பலா உள்ளிட்ட மரங்களை அகற்றுவதற்கும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் மலையக தோட்ட மக்களை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் சுகாதார வசதிகள், வீதிகள், முன்பள்ளிகள், பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றுக்கு தமது அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக தோட்ட நிறுவனங்கள் தெரிவித்தன.

இது தவிர இந்திய அரசாங்கத்தினால் மலையக தோட்ட மக்களுக்காக இரத்தினபுரி மாவட்டத்தில் 263 குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

மலையக தோட்ட மக்களுக்காக அவர்களின் சொந்தமான காணியில் குடியிருப்பு அமைக்கும் வேலைத்திட்டம் ஒன்றையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான புஷ்பகுமார திசாநாயக்க, குருவிட்ட பிரதேச சபையின் தலைவர் விகசித புஷ்பசூரிய, இரத்தினபுரி மாவட்ட மேலதிக செயலாளர் அமில சுரஞ்சித் விஜேரத்ன மற்றும் பலாங்கொடை காவத்தை, புஸ்ஸல்ல உள்ளிட்ட பல தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்

hindutamil-prod_2026-08-24_3sbtyc61_IMGTRBRAJAA210ED3RG16

“விஜய்யின் ஈகோவுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்

August 25, 2026

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் த.வெ.க. அரசு கைவிட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னை அண்ணா

Eb2zWUlU0AE67ID

சாத்தான்குளம் வழக்கு: தூக்குத் தண்டனை கைதிக்கு 2 நாள் அவசர கால விடுப்பு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

August 25, 2026

மதுரை: ரகு கணேஷுக்கு அவசர கால விடுப்பு சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று சிறையில்

cham

சமிந்த விஜேசிறிக்கு பிணை

August 25, 2026

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள்

Parliame

22ஐ சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல்

August 25, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்தை சவால் செய்து இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள்

can

மாணவியின் மனிதநேயப் பண்பு!

August 25, 2026

அக்கரப்பத்தனை பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த 15,000 ரூபாய் பணத்தை கண்டெடுத்த உயர்தர மாணவி ஒருவர், அதனைத் தாமதிக்காமல்

dd

117ம் பிறந்தநாளைக் கொண்டாடிய உலகின் மிக வயதான பெண்!

August 25, 2026

உலகின் மிக வயதான வாழ்ந்துகொண்டிருக்கும் நபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்மணி எதேல் கேட்டர்ஹாம், தனது 117-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்