ஈஸ்டர் குண்டு தாக்குதல் சந்தேகநபர்களுக்குச் சுகாதார வசதிகள் இல்லை
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்போருக்கு போதுமான சுகாதார வசதிகள் இல்லை என்று சந்தேகநபர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (1.12.2025) மூன்றாவது நாளாக நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிகாரப்பூர்வ இல்லமான […]
கந்தளாயில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு
கந்தளாய் மகாவலி கங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, மூன்று கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கந்தளாய் சூரியபுரப் பகுதிக்குள் மகாவலி கங்கை பெருக்கெடுத்ததால், அப்பகுதியைச் சார்ந்த கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன. சூரியபுர, சமகிபுர, சமணலப்பாலம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கி நிலைமை கடுமையாக உருவாகியுள்ளது. வெள்ளநீர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், வெள்ளநீர் அதிகரித்ததால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்து மார்க்கங்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. […]
நாட்டில் இடம்பெற்ற பாரிய அழிவுகளுக்கு அரசாங்கமே காரணம்!
அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்தல் விடுத்துள்ள நிலைமையில் அரசாங்கம் நாடாளுமன்றில் இது தொடர்பில் எவ்வித திட்டங்களும் மேற்கொள்ளாமையே பாரிய அழிவுகளுக்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம்சாட்டியுள்ளார். ‘டிட்வா’ புயலின் கோரதாண்டவத்தின் பின்னர் இன்று (01.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது எதிர்க்கட்சியின் உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த 12 ஆம் திகதி […]
இலங்கையில் அனர்த்தத்திற்குட்பட்டவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான (Harbin Z-9) ஹெலிகாப்டர் மூலம் கொலன்னாவா வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் ஹெலிகொப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து பாகிஸ்தான் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் உலர் உணவு விநியோக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். By C.G.Prashanthan
டிட்வா புயல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
டிட்வா புயல் தாக்கத்தினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று மாலை 5 மணி வரையான காலப்பகுதி வரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் – நானாட்டானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை?
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் சமைத்த உணவுகள் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளப் பகுதியில் இருந்து வெளி வர முடியாத மக்களுக்கு கடற் படையினரின் உதவியுடன் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைய மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,பிரதேச செயலாளர்கள்,கிராம அலுவலர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக துரித […]
இலங்கையின் பேரனர்த்தம்; 3 கிராமங்கள் முற்றாக அழிந்த சோகம்…
தெதுருஓயா பெருக்கெடுத்து 15 அடிக்கு மேல் வெள்ளம் பாய்ந்ததில் பிங்கிரிய-வெல்லன்கிரிய-மோலஎலிய கிராமங்கள் முற்றாக அழிந்துபோயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கிராமத்தவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான வெள்ளப்பெருக்கு எமது வாழ்க்கையில் கண்டதில்லை. சாதாரண மழைக்கும் தெதுரு ஓயாவில் 3-5 அடிக்கு வெள்ளம் வருவது வழமையாகும். இது 15 அடிக்கு மேல் நீர்பாய்ந்தோடியது. வீட்டில் இருந்த எந்த பொருட்களையும் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.நான் கஷ்டப்பட்டு வாங்கிய சைக்கிள் கூட இன்றில்லை. உடுத்திய உடையுடன் தான் இருக்கின்றோம். வாழ்வாதரத்துக்கு வளர்த்த […]
லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம்?
டிசம்பர் மாதத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் நிரப்புதலுக்கான விலை திருத்தம் இருக்காது என்பதை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபாவாகவும் காணப்படுகிறது.
மீண்டும் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மோசமான வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பதுளை – ஊவா பரணகம, சொரணதொட, எல்ல, ஹப்புத்தளை, ஹாலி எல, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, வெலிமட, பசறை, பண்டாரவளை, லுனுகல, பதுளை மற்றும் கந்தேகெட்டிய. கண்டி மாவட்டத்தில் உள்ள ஹதரலியத்த, உடுநுவர, குண்டசாலை, உடுநுவர, பாததும்பர, தும்பனை, மெடதும்பர, கங்கைஹல கோறளை, […]
மன்னார் கிராம மக்களுக்கு விசேட வானூர்தி மூலம் உலர் உணவு
மன்னார்- குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் இன்றைய தினம் (1) காலை ஒரு தொகுதி உலர் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தரைவழிப்பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று தினங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்ததோடு,மருத்துவ தேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முயற்சியினால் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]