இஸ்ரேல் – ஹமாஸ்; போரில் 70,100 பேர் பலி
இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போர், கடந்த அக்டோபரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், போர் ஆரம்பித்ததிலிருந்து, இதுவரை 70,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘ஜெர்மனிக்கான மாற்று’; போராட்டத்தில் வன்முறை
ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் ‘ஜெர்மனிக்கான மாற்று’ என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. இதன் இளைஞர் பிரிவான ‘இளம் மாற்று’ என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் ‘தீவிரவாதக்குழு’வாக வகைப்படுத்தியிருந்தது. இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, ‘ஜெர்மன் தலைமுறை’ என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள் […]
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ‘Rebuilding Sri Lanka’ நிதியம்
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான ‘தித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர். தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் […]
அனர்த்தங்களுக்குத் தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களைப் படுகொலை செய்துள்ளது – சாணக்கியன்
மத்திய மாகாணத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டுள்ளார்கள். சில கிராமங்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளன. இது கொலை. தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது. பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கட்சித் தலைவர் கூட்டத்தில் […]
பாதிக்கப்பட்ட இலங்கைக்கான உதவி வழங்கல்கள்- ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சே
இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து தேசிய மீட்புப்பணிகள் மற்றும் உடனடி மீட்சிக்கான முயற்சிகளுக்குப் பங்களிப்புச்செய்வதை முன்னிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கிளைக்கட்டமைப்புக்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ட்ரூ பிரான்சே தெரிவித்துள்ளார். ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் இலங்கை பேரழிவுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இக்கடினமான வேளையில் இலங்கையுடனான உடன்நிற்பை வெளிப்படுத்திவரும் சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்கள், இலங்கைக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து […]
பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரையும் விமர்சிக்கும் அருகதை கிடையாது – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்
பொன்னம்பலம் குடும்பத்தினருக்கு யாரையும் விமர்சிக்கும் அருகதை கிடையாது எனவும், இந்த நாட்டில் இடம்பெற்ற இனவழிப்பின் பிதாமகர்களே அவர்கள் என்றும் ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதற்கு முன்னர் இருந்த கடற்றொழில் அமைச்சர் ஊழலில் ஊறிப் […]
நவகம்புர கணேஷின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!
இலங்கையின் பிரபல கானா பாடகரான நவகம்புர கணேஷ் என அழைக்கப்படும் முத்துலிங்கம் கணேஷ் அவர்களின் பூதவுடல் இன்று (2025.12.01) மாலை கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் ஏராளமான கலைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது. அவர் கடந்த சனிக்கிழமை (2025.11.29) தனது 60வது வயதில் காலமானார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அமரர் நவகம்புர கணேஷின் பூதவுடல், நேற்றுமுன்தினம் (2025.11.30) கொழும்பு 14, நவகம்புரவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்றைய தினம் (2025.12.01), […]
இந்தியா “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு
இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற வெள்ளப் பாதிப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த மோடி, “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் தொடர்ந்த ஆதரவு இந்தியாவுக்கு வழங்கப்படுமென உறுதியளித்தார். இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திங்கட்கிழமை (1) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு உரையாடினார். இந்த உரையாடலின்போது, இலங்கையில் நிகழ்ந்த பெரும் வெள்ளப் பேரழிவால் […]
கரவெட்டி மற்றும் சாவகச்சேரியில் எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் […]
முல்லைத்தீவு வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகள்…
வெள்ளத்தில் சிக்கிய விவசாயிகளை பாதுகாப்பாக மீட்டெடுத்த சம்பவம் ஒன்று குமுழமுனை கிராமத்தில் நேற்றுமுன்தினம்(29) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் பெய்த கனமழை காரணமாக முல்லைத்தீவு குமுழமுனை நித்தகைகுளம், ஆண்டான் குளம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் வீடுவந்து சேராத நிலையில் அவர்களது தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து குமுழமுனை,நித்தகை குளம், ஆண்டான்குளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளை அளம்பில் அன்னை வேளாங்கன்னி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம், மயூரன், அருள்ராஜ் படகின் உதவியுடன் குமுழமுனை […]