நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரச பொறிமுறைக்கு அசைக்க முடியாத பொறுப்பு உள்ளது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால், அண்மைய காலங்களில் மிகப்பாரிய அழிவை நாடு சந்திக்க நேரிட்டுள்ளதாகவும், இந்த நிலைமையை விரைவாகக் கடந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஆளுநர்கள் மற்றும் மாகாண பிரதம செயலாளர்களுக்கு பரந்த பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த அனர்த்தத்திலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அரச பொறிமுறைக்கு அசைக்க முடியாத பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வழக்கமான சுற்றறிக்கைகள் மற்றும் அன்றாட வேலை முறைகளில் சிக்கிக் கொள்ளாமல் […]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் சேதம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்களுடைய உபகரணங்கள், வாடிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன. கடற்பகுதிகளில் வீசிய கடுமையான காற்றால் பல கடற்றொழிலாளர்களின் உபகரணங்கள் வலைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அத்தோடு, சிலருடைய உபகரணங்கள் கடலோடு அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அதனை கடற்றொழிலாளர்கள் தேடி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமை பற்றிய கரிசனையில் ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது […]

அனர்த்த நிலைமை; சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் […]

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்றால் உயிரிழப்பு!

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக […]

இடர் நிலைமை; வடக்கு ஆளுநர் தலைமையில் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை (01) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் இக்காலக்கட்டத்தில், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை மீளமைப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படைச் சுகாதார வசதிகளை உறுதி […]

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளது

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளது என தொழிலதிபரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில், எலான் மஸ்க் கூறியதாவது: அமெரிக்கா திறமையான இந்தியர்களால், பெரிதும் பயனடைந்துள்ளது. அமெரிக்காவுக்கு குடியேறிய இந்தியர்களால் அமெரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருந்து வருகிறது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், எல்லைக் கட்டுப்பாடுகள் இல்லாமல் அனைவருக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதுபோன்ற கொள்கைகள் சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவித்தது. எச்1பி விசா திட்டத்தில் சில தவறான […]

வழக்கிலிருந்து தப்பிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார். இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. மேலும், […]

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான […]

பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் உயிரோடு இருக்கிறார்

‘‘​பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் அடிலா சிறை​யில் உயிருடன் இருக்​கிறார். அவரை வெளி​நாடு தப்​பிச் செல்​லும்​படி பாகிஸ்​தான் அரசு அழுத்​தம் கொடுத்து வரு​கிறது’’ என பாகிஸ்​தான் தெக்​ரீக்​-இ-இன்​சாப்​(பிடிஐ) கட்​சி​யின் செனட் உறுப்​பினர் குர்​ராம் ஜீஷன் கூறி​யுள்​ளார். பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்​ரான் கான், ராவல்​பிண்​டி​யில் உள்ள சிறை​யில் கொலை செய்​யப்​பட்​டார் என ஆப்​கானிஸ்​தானில் உள்ள சமூக ஊடகங்​களில் கடந்த வாரம் தகவல் பரவியது. சிறை​யில் உள்ள இம்​ரான் கானை அவரது குடும்​பத்​தினர், அரசி​யல் கட்​சி​யினர் சந்​திக்க கடந்த […]