நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமை பற்றிய கரிசனையில் ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்றத்தில் நேரத்தை ஒதுக்காது அரசாங்கம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆளும் தரப்பு தனது கடமைகளை மீறியுள்ளது என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) நடைபெற்ற அமர்வின் போது நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்காமை தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போது தனது கருத்தை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் மூன்று நாட்களுக்கு உரையாற்றுவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் 5ஆம் திகதி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பை ஒத்திவைக்க முடியாது என்று அரசாங்கம் கூறியதால் கட்சித் தலைவர் என்ற ரீதியில் நானும் ஏனைய கட்சித்தலைவர்களும் 5ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால் விவாதம் இன்றி அதனை நடத்துவதற்கு இணங்கினோம்.

அதன்படி தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் இன்றைய தினத்தில் நண்பகல் 12.30 மணி வரையில் பாராளுமன்றத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றிலும் தவறானது. சுனாமியின் பின்னர் நாங்கள் இங்கேயே அதுபற்றி கலந்துரையாடினோம். இது எங்களின் கடமைகளே. ஆனால் இங்கே இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாட முடியவில்லை என்றால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்லது குறைந்தபட்சம் இன்றாவது இது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பை வழங்க வேண்டும். இந்த பாராளுமன்றத்தின் கடமைகளை ஆளும் தரப்பு மீறியுள்ளது. இதனால் நாங்களும் சபையில் இருந்து வெளியேறுகின்றோம் என்றார்.

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக

ar

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

May 31, 2026

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு

kathai so

தமிழில் அறிமுகமாகும் டிஜிட்டல் தளம்- ‘கதை ஷார்ட்ஸ்’

May 31, 2026

ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

pikk

பல்லேகம தேரர் விவகாரம்; அஸ்டமஸ்தான குழுவின் முடிவு

May 31, 2026

மல்வத்த மகா விகாரையின் அஸ்டமஸ்தான குழு, வட மத்திய மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி சைத்யரமாதிகாரரின் பொறுப்பாளருமான வணக்கத்திற்குரிய எத்தலேவத்துனுவேவ

sl

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் ரத்து

May 31, 2026

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய

sea

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மாயம்

May 31, 2026

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை

death

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் மரணம்

May 31, 2026

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர்

prasa

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

May 31, 2026

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத்

acc

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!

May 31, 2026

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும்

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை