‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹர்ஷவர்தன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆகாஷ் முரளி கதையின் நாயகனாக தோன்றுகிறார். இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் தமிழக செய்தி துறை & பள்ளி கல்வித்துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார் . அத்துடன் படத்தின் அறிமுக போஸ்டரையும் அவர் வெளியிட்டார்.