வழக்கிலிருந்து தப்பிக்க அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார்.

இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார். அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்குகள் நாட்டை பிளவு படுத்துவதாகவும், விசாரணையை உடனடியாக முடிப்பது தேசிய நல்லிணக்கத்தை மீட்டெடுக்க உதவும் என்றும், வீடியோ ஒன்றில் நெதன்யாகு கூறியிருந்தார்.

மேலும், வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு அதிபர் அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சட்ட மற்றும் நீதித்துறை கருத்துக்களை பெற்ற பின், பொறுப்புடனும், நேர்மையுடனும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் அதிபர் ஐசக்குக்கு எழுதிய கடிதத்தில், நெதன்யாகுவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், மன்னிப்பு கோரியுள்ளார் நெதன்யாகு.

பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவது அரிதான மற்றும் விதிவிலக்கான நடவடிக்கையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், வருத்தம் தெரிவிக்காமலும் மன்னிப்பு கோருவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி தலைவர்கள் வாதிடுகின்றனர்.

un

சுதீப் – விக்ராந்த் இணைந்து மிரட்டும் ‘அன்டர்-18’

May 31, 2026

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்- பான் இந்திய நடிகருமான கிச்சா சுதீப் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மையான வேடத்தில்

aa

புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் ஆகாஷ் முரளி

May 31, 2026

‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான நடிகர் ஆகாஷ் முரளி அடுத்ததாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தினை அறிமுக

ar

‘கான் சிட்டி’ திரைப்பட ‘பிராடு பயலே..’ பாடல் வெளியீடு

May 31, 2026

நடுத்தர மக்களின் பெரும் கனவான பணத்தை மையப்படுத்தி கற்பனையுடன் தயாராகி இருக்கும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பிராடு

kathai so

தமிழில் அறிமுகமாகும் டிஜிட்டல் தளம்- ‘கதை ஷார்ட்ஸ்’

May 31, 2026

ரீல்ஸ்கள் – மீம்ஸ்கள் என சமூக ஊடக வலைதளங்களை.. பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பாவிக்கும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

pikk

பல்லேகம தேரர் விவகாரம்; அஸ்டமஸ்தான குழுவின் முடிவு

May 31, 2026

மல்வத்த மகா விகாரையின் அஸ்டமஸ்தான குழு, வட மத்திய மாவட்டத்தின் பிரதம சங்கநாயக்கரும், ருவன்வெலி சைத்யரமாதிகாரரின் பொறுப்பாளருமான வணக்கத்திற்குரிய எத்தலேவத்துனுவேவ

sl

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் ரத்து

May 31, 2026

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய

sea

கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் மாயம்

May 31, 2026

ஹம்பாந்தோட்டை, ஹுங்கம – கலமெட்டிய கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை

death

மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் போதகர் மரணம்

May 31, 2026

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில், மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர்

prasa

புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் குழுத் தலைவராக பிரசாத் காரியவசம்

May 31, 2026

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழுவின் தலைவராக இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் பிரசாத்

acc

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு – பேருந்து சாரதி கைது!

May 31, 2026

புத்தளம், கரம்பை – உடப்பு பிரதான வீதியின் சமீரகம பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மோட்டார் சைக்கிளும்

crim

கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்காததால் 11 வயது தங்கை கொலை; 14 வயது அண்ணன் கைது

May 31, 2026

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றில், 11 வயதுடைய தனது சொந்தத் தங்கையைக் கழுத்தை நெரித்துக்

rain

இன்று பல பிரதேசங்களில் மழை

May 31, 2026

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை