தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள்; ஆராயு இலங்கைத் தமிழரசுக்கட்சி அழைப்பு

தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி விடுத்த சந்திப்பில் பங்கேற்பதற்குத் தாம் இணங்கியிருப்பதாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும், அதற்குரிய பதிலை விரைவில் அனுப்பிவைக்கவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தெரிவித்துள்ளன. வட, கிழக்கு தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பொதுவான பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்றை நடாத்துவதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி நவம்பர் மாதம் 7 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய […]

எத்தியோப்பியாவில் எரிமலை வெடிப்பு; விமான சேவை பாதிப்பு

எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் சுமார் 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக ஹெய்லி குப்பி எரிமலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்தது. இதனால், வானில் சுமார் 14 கிலோ மீற்றர் உயரத்துக்கு சாம்பலும், மேகங்களில் புகையும் சூழ்ந்தது. இதன் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அடிஸ் அபாபாவில் இருந்து சுமார் 800 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள அபார் பகுதியில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை வெடித்தது. இதன் எரிமலை தொடர்ந்து பல மணி நேரமாக வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து […]

பரீட்சை மத்திய நிலையத்தில் போதையில் இருந்தவருக்கு தடை

கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணியாற்றிய தேர்வு மையத்தின் துணைத் தலைமை ஆசிரியர், 21 ஆம் திகதி உத்தியோகபூர்வ பணிகளுக்காக பரீட்சை மண்டபத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர், குடிபோதையில் இருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர் பணிபுரிந்து […]

இன்று முதல் மழை அதிகரிக்கும்

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது […]

சிவனொளிபாதமலை பருவகாலம்; சூரிய உதயத்தைக் காண ஏராளமான வெளிநாட்டு பயணிகள்

இந்த ஆண்டு சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாக (2025/2026) இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண சிவனொளிபாதமலைக்கு வருகின்றனர். சிவனொளி பாதமலை, உலகின் மிக அழகான இடமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக ஏராளமான ​வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நல்லத்தண்ணி​- சிவனொளிபாதமலை வீதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த மரம் : ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் வீழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், […]

அரச வங்கி ஒன்றில் ஏ.டி.எம்மில் 4 லட்சம் பெற்றவர் கைது!

மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் வழங்கப்பட்ட ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஏ.டீ.எம் அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது ஏ.டீ.எம் அட்டை தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளது. இந் நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை நான்கு லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. […]

பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்த விபத்தில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இரவு 7:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது, இவ் விபத்து இடம்பெற்றதற்கான காரணம் கன மழை மற்றும் அடர்ந்த மூடு பனியினால் வீதி தெளிவில்லாததால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக என்று […]

இளைஞன் படுகொலை; 3 பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை

2011 ஆம் ஆண்டு இளைஞனை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பத்து பேருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) மரண தண்டனை விதித்தது. அந்த பத்து பேரில் மூன்று பெண்களும் அடங்குவர்.

மாநகர சபையின் பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருமலையில் கண்களை கட்டி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாநகர சபை அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பிழையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,இளைஞர்கள் குழு ஒன்றினால் சபைக்கு முன்பாக திங்கட்கிழமை (24) அன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஊர்வலமாக பதாதைகளை ஏந்திய வண்ணம் வருகை தந்த சுமார் 50 இளைஞர்கள்,மாநகர சபை வாசலில் தமது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளையோரின் கல்வி,வேலை வாய்ப்பு, திறன் விருத்தி சார்ந்து பல்வேறு சமூக செயற்பாடுகளை “தளம்” நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது […]