இந்த ஆண்டு சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாக (2025/2026) இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் காண சிவனொளிபாதமலைக்கு வருகின்றனர்.
சிவனொளி பாதமலை, உலகின் மிக அழகான இடமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நல்லத்தண்ணி- சிவனொளிபாதமலை வீதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.