கொழும்பு, டிசம்பர் 18, 2025 – ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற 2025 பொதுநலவாய சுமோ கிண்ணப் போட்டியில் (Commonwealth Sumo Cup 2025), திறந்த எடைப் பிரிவில் (Open Weight) இலங்கை வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற வீராங்கனைகள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களை சந்தித்தனர்.
வீராங்கனைகளின் இந்தச் சிறந்த வெற்றியைப் பாராட்டிய அமைச்சர், அவர்களின் எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளுக்கு அமைச்சின் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகள்:
எச்.டி.கே. சந்தருவி (H.D.K. Sandaruvi)
எச்.ஏ.கே. கௌஷிகா (H.A.K. Kawsika)
பி.ஏ.எஸ்.எஸ். லக்ஷானி (P.A.S.S. Lakshani)
கே.என்.வி.எஸ்.எல். நாநாயக்கார (K.N.V.S.L. Nanayakkara)
இச்சந்திப்பின் போது, இலங்கை தேசிய சுமோ சங்கத்தின் நிருவாகத்தினர் அமைச்சருக்கு தமது நன்றிகளைத் தெரிவித்ததுடன், இலங்கையில் சுமோ விளையாட்டைப் பிரபல்யப்படுத்துவது மற்றும் வீரர்களின் திறமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். குறிப்பாக, வீர வீராங்கனைகளுக்கு சர்வதேச பயிற்சி வாய்ப்புகளை (International Training) வழங்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய சுமோ சங்கத்தின் தலைவர் யோஹான் பொன்சேகா, செயலாளர் பி.ஜி.பி. உதயங்க, பொருளாளர் அசங்க விஷ்வஜித் மற்றும் சிரேஷ்ட வீரர் திரு. தினேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan