தாராபுரம்:
தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தவெக அரசையும் முதலமைச்சர் விஜய்யையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவின் கிளை தவெக:
வாக்காளர்களிடையே பேசிய அவர், “கறுப்பு, சிவப்பு கலர் சைக்கிளில் சென்று 2021 தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்தான் விஜய். திமுகவின் கிளைதான் தவெக. அதிமுகவை பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மாற்றுக்கட்சிக்கு சத்தியபாமா விலை போய்விட்டதால் தாராபுரத்தில் மீண்டும் போட்டியிடுகிறார். தாராபுரம் மக்களின் வாக்குகளை விற்ற சத்தியபாமாவை நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்” என்றார்.
கரூர் துயரம் குறித்துச் சாடல்:
தொடர்ந்து பேசிய அவர், “கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தாதவர்தான் தவெக தலைவர் விஜய். துயரம் நடந்த நேரத்தில் அவர் காரில் ஏறி ஓடிவிட்டார். 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கரூரில் இருந்து சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறுபவர் தேவையா? வேறு கட்சியில் வெற்றி பெற்றவரை ராஜினாமா செய்ய வைத்த தவெக தூய கட்சி அல்ல, தீய கட்சி” என்று கடுமையாகச் சாடினார்.
அதிமுகவே தவெகவை விழுங்கும்:
“இதே நிலை தொடர்ந்தால் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் எனத் தவெகவைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் எச்சரித்தன. இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே கூறுகின்றனர். அதிமுக தவெக வசம் சென்றுவிடும் என்று கனவிலும் கூட நினைக்காதீர்கள். அதிமுகதான் தவெகவை விழுங்கும்” என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கூறினார்.
#EdappadiPalaniswami #EPS #CMVijay #TVK #AIADMK #Dharapuram #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive