200 யூனிட் இலவசம் என்று சொல்லிட்டு 4 மடங்கு வரை மின் கட்டணம் உயர்ந்தது எப்படி? – சீமான் ஆவேச கேள்வி!

சென்னை:

தமிழ்நாட்டில் நடப்பு மாதம் பெரும்பாலான வீடுகளுக்கான மின்கட்டணம் 4 மடங்கு வரை உயர்ந்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக அரசு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்று அறிவித்த நிலையில், அதற்கு நேர்மாறாகக் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தாமதமாக மின் அளவீடு எடுக்கப்பட்டதும், பழுதான கருவிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததுமே இந்த மின்கட்டண உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

200 யூனிட் இலவச மின்சாரத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்றே திட்டமிட்டுத் தாமதமாக மின் அளவீடு செய்யப்பட்டதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். தாமதிக்கப்பட்ட மின் அளவீட்டினால் பலரது மின்பயன்பாடு 500 யூனிட்டிற்கு மேல் தாண்டியதால், இலவச மின்சாரப் பலன் கிடைக்காமல் போனதோடு ஒரு யூனிட்டிற்கான கட்டணமும் கடுமையாக அதிகரித்துள்ளது. மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் அதுவும் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மட்டுமே என்று தவெக அரசு மக்களை ஏமாற்றியது போதாதென்று, தற்போது கணக்கீட்டில் குளறுபடி செய்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது பெருங்கொடுமை என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மாதம் ஒருமுறை மின்கணக்கீடு செய்யும் நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், மின்னிலக்க அளவீட்டுக் கருவியை விரைந்து பொருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மின் கணக்கீட்டுக் குளறுபடிகளால் பாதிக்கப்பட்டுப் பன்மடங்கு கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களின் மின்கட்டணத்தை அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், வாக்குறுதி அளித்தபடி மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் சீமான் ஆணித்தரமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

#Seeman #EBBillHike #TNEB #TVKGovt #NTK #CMVijay #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduPolitics #ElectricityBill #PoliticalUpdate #TamilNewsLive

exa

மேலதிக வகுப்புகளுக்கு தடை!

August 1, 2026

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள்

saman

நீதித்துறை; ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்புக்கு எதிராக சர்வஜன வாக்கெடுப்பு தேவை

August 1, 2026

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆக உயர்த்த அரசாங்கம் எடுக்கும் முயற்சி, நீதித்துறைக்குள் முன்னெடுக்கப்படும் ஒரு

jaffna GH

தமக்கு தாமே தீ மூட்டிய இரட்டை சகோதரிகள்; புன்னாலைக்கட்டுவனில் சம்பவம்

August 1, 2026

யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தமக்கு தாமே தீ மூட்டி தவறான முடிவெடுக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து தீ காயங்களுக்கு உள்ளான

7

கனிம வளங்களை எடுத்துச் செல்ல தடை; விவசாய நிலங்களை அழிப்பதற்கு அனுமதியா? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

August 1, 2026

சென்னை: தமிழ்நாட்டின் கனிம வளங்கள் பிற மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்கும் தமிழ்நாடு அரசு, கர்நாடகாவின் தேவைக்காகத் தமிழ்நாட்டின் விவசாய நிலங்கள்

cur

ராகமயில் பொலிஸ் ஊரடங்கு

August 1, 2026

மறு அறிவிப்பு வரும் வரை ராகம பொலிஸ் எல்லைக்குள் பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர சிறையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மையைக்

arr

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் கைது!

August 1, 2026

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வைரவப்புளியங்குளம்

tra

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் எச்சரிக்கை!

August 1, 2026

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ரயில்

WEST JET

ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தக் கெடுவுக்கு முன்னதாக 81 விமானச் சேவைகளை ரத்து செய்தது வெஸ்ட்ஜெட் (WestJet)

August 1, 2026

வெளியிடப்பட்ட நேரம்: ஆகஸ்ட் 01, 2026, காலை 8:16 (EDT) | கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 3 மணி நேரத்திற்கு முன்

default (45)

சஸ்காட்செவன், பிரின்ஸ் அல்பெர்ட்டில் பெண் படுகொலை: 2 சிறுவர்கள் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

August 1, 2026

பிரின்ஸ் அல்பெர்ட் (Prince Albert) நகரில் 27 வயதான டைனா கௌதியர் என்பவரின் மரணம் தொடர்பாக இரண்டு சிறுவர்கள் மீது

default (44)

ஷம்பாலா இசை விழாவில் காணாமல் போன பெண் பாதுகாப்பாக மீட்பு: குடும்பத்தினரும் பொலிஸாரும் உறுதி

August 1, 2026

பி.சி. (B.C.) மாநிலத்தில் நடைபெற்ற ஷம்பாலா (Shambhala) இசை விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போன ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் பாதுகாப்பாகக்

MAHARA2

மஹர சிறைச்சாலை வன்முறையில் கைதி ஒருவர் பலி; 6 பேர் காயம்

August 1, 2026

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது ஆறு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று

6

கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன: திமுக பகிரங்க குற்றச்சாட்டு!

August 1, 2026

சென்னை: நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முறையாகத் தேர்தல் நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத்