20 வருடமாக அடிப்படை வசதி இல்லாத மீனவ கிராமத்து மக்கள்

மட்டக்களப்பு பாலமீன்மடு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத் திட்டத்தில் 30 குடும்பங்கள் அடிப்படை வசதிகளான மலசல கூடம், குடிநீர், மின்சாரம் இல்லாமல் கடந்த 20 வருடமாக வாழ்ந்து வரும் மக்களின் அவலங்களை போக்குமாறு ஜனாதிபதி மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலைமீன் மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற வாராந்த ஊடக மாநாட்டில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா, மற்றும் ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மீனவர் எழுச்சி கிராமம் 50 வீட்டுத்திட்டம் கடந்த 2000 ம் ஆண்டு உருவாக்கி குடியேற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில் 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தினால் இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்;பட்டதையடுத்து ஒரு சிலருக்கு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சுவிஸ் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் 2006ம் ஆண்டு பாதிக்கப்பட்ட மீனவர் கிராமத்தில் ஒரு சிலர் குடியேறி தொடர்ந்து 30 குடும்பங்கள் இன்று வரையும் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கான காணி ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த மீனவர் எழுச்சி கிராமாக அமைக்கப்பட்ட அந்த காணியில் உல்லாச விடுதி ஒன்று நிர்மாணிப்பதற்காக 2014ம் ஆண்டு அப்போது இருந்த பிரதேச செயலாளர் ஒரு தனிநபருக்கு குத்தகைக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதன்போது பாலைமீன் மடுவில் உள்ள பொது நல அமைப்புகள் ஆலய நிர்வாகம் அதற்கு எதிர்த்து அதனை தடை செய்ய வேண்டும் என அப்போது இருந்த ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து 2015ம் ஆண்டு அனுமதி வழங்கிய பிரதேச செயலாளரால் அது இரத்து செய்யப்பட்டது.

இன்று அந்த மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்காமல் இது அனர்த்த வலயமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே அந்த இடம் ஹோட்டல் கட்ட அப்போது அனர்த்த வலயம் இல்லை அனுமதி வழங்குகிறார்கள் அந்த ஊரிலே பிறந்த காணி இல்லாத மக்கள் குடியிருப்பது அனர்த்த வலயமா?

எனவே ஹோட்டலுக்கு வழங்கப்பட்ட காணியை ரத்து செய்ததன் காரணத்தினால் அந்த மக்களை பழி தீர்ப்பதற்கு அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தி அப்போதைய பிரதேச செயலாளர் மோசடி ஒன்றை செய்துள்ளார்.

இருந்தபோதும் இந்த மீனவர் எழுச்சி கிராமமானது கடலில் இருந்து 120 மீற்றருக்கு அப்பால் இருக்கிறது இவர்கள் அடிப்படை வசதிகளான குடிநீர் மலசல கூடம் மின்சாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அந்த அடிப்படை வசதிகளை செய்துதர முன்வந்தாலும் அவர்களுக்கு காணி அனுமதி பத்திரம் இல்லாத போதும் அதற்கான அனுமதியை கிராம சேவகர் உத்தியோகத்தரிடம் கோரினால் அதற்கு அவர் அனுமதி வழங்க மறுத்து வருகிறார்.

எனவே அப்போது இருந்த பிரதேச செயலாளர் தவராசா இது அனர்த்த வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது முற்றிலும் தவறான மோசடியானது என இப்போது உள்ள அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகவே நீண்ட காலமாக குடியிருக்கும் இந்த 30 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்குங்கள் அல்லது மாற்றுக் காணிகளை வழங்குங்கள்.

புதிய அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அருகில் எத்தனையே பேர் அரச காணிகளை சட்டத்திற்கு முரணான முறையில் காணிகளை கையகப்படுத்தி அதனை விற்பனை செய்யும் ஒரு தொழிலாக செய்து வருகின்றனர்.

ஏழைகள் காணி இல்லை என 10 சே; காணியை அடைத்தால் சட்டம் வெகு வேகமாக அவர்கள் மீது பாயும் அதே நேரத்தில் சண்டியர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் பணபலம் படைத்தவர்கள் காணிகளை அடாத்தாக பிடித்து விற்பனை செய்யும் போது சட்டங்கள் அவர்களுக்கு எதிராக பாய்வது மிகவும் குறைவு எனவே பணக்காரர்களுக்கு ஒரு சட்டமும் ஏழைகளுக்கு ஒரு சட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த கிராமத்தை பூர்வீகமாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஒரு குடும்பத்தில் 3 பெண் பிள்ளைகள் இருந்தும் அவர்கள் மூத்த பிள்ளைக்கு அவர்களது வீட்டை கொடுத்து விட்டு அங்கே ஒரு வீட்டுக்குள் 3 குடும்பங்களும் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரத்தை ஆசியாவில் பேசும் பொருளாக நினைக்க வேண்டும் என்ற நீங்கள் நகரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாதிரி மீனவர் கிராமத்தில் மலசல கூடம் இன்றி பெண்களும் ஆண்களும் தங்கள் காலை கடனை நிறைவேற்றுவதற்காக சவுக்கு காட்டிற்குள் சென்று பல சிரமங்கள் மத்தியில் நிறைவேற்றி வருகின்றனர் இது தானா? உங்கள் மட்டக்களப்பை ஆசியாவில் பேசும் பொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளீர்கள்.

முதலிலே மக்களுடைய அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனை நிறைவேற்றுங்கள் அப்போது தான் மட்டக்களப்பு ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் பேசும் பொருளாகும் இந்த மக்கள் இரும்பு பரல்களில் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீரை எடுத்து தான் குடிக்கின்றனர். இது ஒரு மோசமான மனிதாபிமானமற்ற செயல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே இரும்பு பெரலில் பதித்த குடிநீரை உங்களால் ஒரு நாள் குடிக்க முடியுமா?

எனவே மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் கேட்டுக் கொள்வது இந்த மக்களின் அவல நிலையை போக்குவதற்காக உடனடியாக கள விஜயம் மேற்கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கவும் மாவட்டதிலுள்ள அரசியல்வாதிகள் மக்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை அவர்கள் தேர்தல் காலம் வரும்போது இறப்பு வீடுகள் ஆலயங்கள், திருமண வீடுகளுக்கு செல்வார்கள்.

அதேபோன்று தேர்தல் வரும் போது இந்த அரசியல்வாதிகள் கிராமங்களை தேடி அலை அலையாக வருவார்கள் தேர்தல் முடிந்த பின்னர் அந்த மக்கள் இருக்கிறார்களா? என நினைத்து பார்க்க மாட்டார்கள் எனவே குடிநீர் அற்று இருக்கின்ற அந்த கிராமத்துக்கு மட்டு மாநகர சபை ஒரு தண்ணீர் பரல் ஒன்றை வைத்து சுத்தமான குடிநீரை வழங்க முன்வர வேண்டும் என்பதுடன் இந்த மக்கள் நலனில் கருத்தாக ஈ.பி.டி.பி இருக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உன்னிப்பாக கவனிக்கும் என்றர்.

negombo pri

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; சாட்சியம் வெளிவருவது தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தலாக அமையும் – நீதிமன்றம்

July 31, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு

cim

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ‘ரத்மலானே சைமா’ வௌியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!

July 31, 2026

மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான ‘ரத்மலானே சைமா’ என்பவர், கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ளமை

hara

ஹரக் கட்டாவுக்கு எதிரான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி

July 31, 2026

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ஹரக் கட்டாவிற்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்கு தொடர

conta

இலங்கைக் கரையோரங்களில் 43 கண்டெய்னர் அளவிலான கழிவு பிளாஸ்டிக் துகள்கள் சேகரிப்பு!

July 31, 2026

இந்தியாவின் கேரளா கடற்பரப்பில் மூழ்கிய ‘MSC Elsa 3’ சரக்குக் கப்பலில் இருந்து வெளியேறி இலங்கைக் கரையோரங்களில் ஒதுங்கிய பிளாஸ்டிக்

usss

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

July 31, 2026

மேற்காசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக

D7IMGVBL7NGNRPBBLZ4TYVZV5M

மேனிடோபாவில் காணாமல் போன பூனை: பல வாரங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் ஒன்டாரியோ குடும்பம்

July 31, 2026

ஒன்டாரியோவின் ஹாமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த பூனை ஒன்று மேனிடோபா (Manitoba) மாகாணத்தில் எதிர்கொண்ட துயரமான சம்பவங்கள் ஒரு முடிவுக்கு

ru

ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

July 31, 2026

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேசத்துரோக வழக்கில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு (Darya

LR2AR5FDAJCGTMLO7VLVV7NBAI

பெர்லிங்டன் GO ரயில் நிலைய நிறுத்துமிடத்தில் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, பின்தொடர்ந்து சென்ற உபர் ஓட்டுநர்: பொலிஸ் தகவல்

July 31, 2026

கடந்த மாதம் பெர்லிங்டன் பகுதியில் பெண் ஒருவர் இருமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, உபர் (Uber) ஓட்டுநர் ஒருவர்

Amnesty-900x550

இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம்

July 31, 2026

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போருக்கு இடையே, இஸ்ரேலுக்கு இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகச் சர்வதேச

CHSENPJBQZD35JIBYX3KXNJB74

நோர்த் யோர்க்கில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

July 31, 2026

வியாழக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் வாகனம் மோதியதில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

fif

கடும் கண்டனத்தில் உலகக் கிண்ண பங்குகளை தனியாருக்கு விற்கும் FIFA திட்டம்?

July 31, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் FIFA அமைப்பின் திட்டத்திற்கு ஆசிய கால்பந்து சம்மேளனத்தின்

ac

கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – மக்களின் கொந்தளிப்பால் வன்முறை

July 30, 2026

நீர்கொழும்பை அண்மித்த பகுதியில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த நிலையில் வன்முறை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் அங்கிருந்த மக்கள்