ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 16ஆவது அத்தியாயத்தில் இரண்டாம் நாளான இன்றைய தினம் 3 போட்டிகள் நடைபெறுகின்றன.
நடப்பு உலக சம்பியனும் நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை சூடியதுமான அவுஸ்திரேலியா இன்று நடைபெறும் ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை எதிர்த்தாடுகிறது.
இப் போட்டி விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இக் குழுவில் இலங்கையும் இடம்பெறுவதால் இப் போட்டி முடிவு இலங்கைக்கு முக்கியம் வாய்ந்ததாக அமையும்.
சி குழுவில் இடம்பெறும் முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்தும் பாகிஸ்தானும் ஹராரே, டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் மோதுகின்றன.
மற்றொரு முன்னாள் சம்பியனான தென் ஆபிரிக்கா டி குழுவில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடுகிறது.
இப் போட்டி விண்ட்ஹோக், ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.